சமீபத்தில் நடைபெற்ற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப்,கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் 4 மாநிலங்களில் பாஜக சிறப்பான வெற்றியை பெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்கவைத்தது. இந்நிலையில் அசாம், பஞ்சாப்,ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 


அதன்படி அசாம் (2),ஹிமாச்சலப் பிரதேசம்(1), கேரளா(3), நாகலாந்து(1), திரிபுரா(1), பஞ்சாப்(5) ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அசாம் மாநிலத்திலுள்ள காலியாகும் இரண்டு இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்கு மொத்தம் உள்ள 126 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை பிடிக்க 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் அந்த மாநிலத்தில் இரண்டு இடங்களையும் பாஜக வெல்லும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் கூறியுள்ளார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ரிபூன் போரா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 


கேரளா மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் 3 இடங்களுக்கு ஆளும் எல்டிஎஃப் அமைப்பு 2 வேட்பாளரைகளை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 190 இடங்களை கொண்ட கேரளா சட்டப்பேரவையில் ஆளும் எல்டிஎஃப் 2 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 


நாகலாந்து மாநிலத்தில் காலியாக உள்ள இடத்திற்கு பாஜக சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். கொன்யாக் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். நாகலாந்து மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகும் முதல் பெண் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


திரிபுரா மாநிலத்தில் காலியாகும் ஒரு இடத்திற்கு பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 60 பேர் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 40 இடங்களை தன் கைவசம் வைத்துள்ளது. இதனால் இந்த இடத்தை பாஜக கைப்பற்றும் என்று கருத்தப்படுகிறது. 


பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு ஆம் ஆத்மி கட்சி 5 வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்கள் அனைவரும் தற்போது போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதனால் மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 10ஆக அதிகரித்துள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் தற்போது பாஜகவிற்கு 97 எம்பிக்கள் உள்ளனர். 




மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண