மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரே கட்ட வாக்குப்பதிவு உள்ள நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், கடைசி வாக்குப்பதிவுக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
வெப்ப அலையில் ராகுல்:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில், பொது மேடையில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெப்ப அலை இருந்தது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல், தலையில் தண்ணீர் ஊற்றினார்.
பிரதமர் மோடிக்கு டாடா:
பின்னர், அவர் பேசியதாவது ஜூன் 4 ஆம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால், ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு மோடிக்கு டாடா-தான் என்றார். பாஜகவுக்கு குட் பைதான் என தெரிவித்தார். பொதுமக்களை ஏமாற்றும் இந்த போலிக்காரகளுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியானது வாக்குகளைப் பெறுகிறது என்றும் அதன் பயன் தெரிகிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். பிஜேபியிடம் இருந்து நாடு விடுதலை பெறும், நாட்டின் உண்மையான நல்ல நாட்கள் விரைவில் வரவுள்ளன எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Also Read: 2019ம் ஆண்டு கேதர்நாத்! இந்த முறை விவேகானந்தர் பாறை - தியானத்திற்கு நேரம் குறித்த பிரதமர் மோடி.!