Rahul gandhi Lok Sabha Elections 2024:


ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 3 லட்சத்து 65 ஆயிரத்து 559 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 2 லட்சத்து 84 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.


வாக்கு எண்ணிக்கை தொடக்கம்:


உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ள ரேபரேலி தொகுதியில் கடந்த மே மாதம் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 


காங்கிரஸ் கட்சியின் கோட்டை: அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதி என்பதால் அனைவரும் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது.


என்னதான் உத்தரபிரதேசம் பாஜகவின் கோட்டையாக இருந்தாலும், அமேதி மற்றும் ரேபரேலி நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. ரேபரேலி தொகுதியை பொறுத்தவரையில் இதுவரை 20 முறை தேர்தல் நடந்துள்ளது.


அதில், 17 முறை காங்கிரஸ் கட்சியும் 2 முறை பாஜகவும் ஒரு முறை ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி 2 முறையும் இந்திரா காந்தி 3 முறையும் சோனியா காந்தி 5 முறையும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.


ரேபரேலியின் அரசியல் வரலாறு: கடந்த 20 ஆண்டுகளாக ரேபரேலியில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி அறிவித்ததால் ரேபரேலியில் இந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்டார்.


ரேபரேலி மக்களவை தொகுதியின் கீழ் பச்ரவன் (தனி), ஹர்சந்த்பூர், ரேபரேலி, சரேணி, உஞ்சஹர் என ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. அதில், 3 தொகுதிகள் காங்கிரஸின் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி வசம் உள்ளது. 2 பாஜக வசம் உள்ளது.


இந்த முறை ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாகூர் பிரசாத் யாதவ் களமிறங்கினார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சோனியா காந்தி 5,34,918 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங் 3,67,740 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ரேபரேலியில் போட்டியிட்டார்.


இதையும் படிக்க: Election Results 2024 LIVE: நாடே எதிர்பார்ப்பு, மக்களவை தேர்தல் முடிவுகள் - உடனுக்குடன் அறிய Abpnadu-உடன் இணைந்திருங்கள்..!