PM Modi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என, பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

மீண்டும் கூடாரத்தில் ராமர்:

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, சமாஜ்வாதியும், காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால், ராமர் மீண்டும் கூடாரத்தில் சென்று அமர்ந்து கொள்வார். அவர்கள் ராமர் கோயில் மீது புல்டோசரை செலுத்துவார்கள். எங்கு புல்டோசரை ஓட்ட வேண்டும், ஓட்டக் கூடாது என்பது தொடர்பாக அவர்கள் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என மோடி பேசியுள்ளார்.

ரேபரேலியில் இருந்து பிரதமர்?

தொடர்ந்து பேசுகையில், “ ரேபரேலி மக்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதை கேட்டதும் சமாஜ்வாதி கட்சியின் இளவரசுக்கு இதயம் உடைந்தது. அவருக்கு கண்ணீர் மட்டுமே வரவில்லை, அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் கரைந்தன. யோகி ஆதித்யநாத்தின் ஒரே மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தால், வெளிநாடு செல்லும் போது நான் மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதற்காக மாநில இணையதளத்தைப் பார்த்து, 5-6 பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.