விழுப்புரம்: சமூக நீதி பற்றி பேசும் பாமக சமூக நீதிக்கு எதிரான கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு வகுப்பு வாத அரசியலை செய்யும் பாஜகவிற்கு வால்பிடிக்கின்ற பாமகவை மக்கள் நிராகரிப்பார்கள் என சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள தனியார் விடுதியில் சிறுபான்மையின கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார  ஆலோசனை கூட்டம் ஆனையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அமைச்சர்கள் பொன்முடி செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவதால் அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் இடைத்தேர்தலில் ஏன் இவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறோம் என்றால் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் இந்தியா கூட்டணி  பெற்றுள்ளது.


மதவாத அரசியலை பாசீச அரசியல், சாதியத்தை முன்னெடுத்த பாஜகவை ஒட்டுமொத்தமாக மக்கள் நிராகரித்துள்ளதாகவும் சாதியவாதிய சக்திகளும் மதவாத சக்திகள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்பது எதை காட்டுகிறது என்றால் மக்கள் மதவாதத்தையும் சாதிய வாதத்தையும் விரும்பவில்லை என்பத்தை காட்டுகிறது.


சமூக நீதி வெற்றி கிடைப்பதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் என கூறினார். சமூக நல்லினக்கத்தின் மிகப்பெரிய எக்கு கோட்டையாக தமிழக உள்ளதாகவும், விக்கிரவாண்டி தேர்தலில் சாதிய அரசியலை நிராகரிப்பார்கள் என்றும் பாமக பாஜகவின் முகமூடியாக வந்து இருப்பதாகவும், சமூக நீதி பற்றி பேசும் பாமக சமூக நீதிக்கு எதிரான கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு வகுப்பு வாத அரசியலை செய்யும் பாஜகவிற்கு வால்பிடிக்கின்ற பாமகவை மக்கள் நிராகரிப்பார்கள் என தெரிவித்தார். 


பாமகவிற்கு போடுகின்ற ஓட்டு பாஜகவிற்கு போடுகின்ற ஓட்டு என்றும் திமுகவிற்கு போடுகின்ற ஓட்டு முன்னேற்றத்திற்காக அளிக்கிற ஓட்டு என்றும் சிறுபான்மை இன மக்களுக்கான நலத்திட்டங்களை முன்று ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளதாகவும் 10.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசும் ராமதாஸ் மோடியிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோரி கட்டாயபடுத்தும் தைரியம் அவருக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.


இடஒதுக்கீடு வழங்கிற அதிகாரத்தில் திமுக தான் உள்ளதாகவும் அவர்களுக்கு செய்வதற்கு தயாராக உள்ளனர். இடைத்தேர்தலில் பாமகவிற்கு வாகக்ளிப்பதின் மூலம் பெற முடியாது. போதை மருந்தும் கள்ளச்சாராயமும் உலகம் முழுவதும் பெரிய வியாபாரமாக உள்ளது இந்த போதை மருந்தினை கட்டுபடுத்துவது எல்லா அரசாங்கத்திற்கும் சவாலாக உள்ளதாகவும் போதை மருந்துகள் இந்தியாவிற்குள் வருவதற்கு தலைவாயிலாக குஜராத் உள்ளதால் அங்கு கட்டுபடுத்திவிட்டால் இந்தியாவிற்குள் போதை மருந்துகள் வராது என தெரிவித்துள்ளார்.