ஓ.பி.எஸ்., ஆதரவாளர் மருது அழகுராஜ் பேட்டி
மதுரை மாட்டுதாவணி பகுதியில் செய்தியாளர்கள் அரங்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்..,” ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., , ஒரு சுயேச்சை வேட்பாளர். சுயேச்சை வேட்பாளர் OPS ஐ பொது வேட்பாளராக ராமநாதபுரம் மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். அறந்தாங்கி தொடங்கி முதுகுளத்தூர், திருச்சுழி உள்ளிட்ட தொகுதியி ன் அனைத்து தரப்பு மக்களும் OPS க்கு ஆதரவு தருகின்றனர். ஓ.பி.எஸ்., பெயரில் 5 நபர்களை கொண்டு வந்து அவரது வெற்றியை தடுக்க , எதிரிகள் நினைக்கின்றனர். எடப்பாடி அதிமுகவில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், மணல் கொள்ளை நடத்தியவர்கள், காண்டிராக்டர்களுக்கு சீட் கொடுத்தனர். ஆனால் அன்வர் ராஜாவுக்கு ஏன் அதிமுகவில் சீட் கொடுக்க வில்லை.
10 தோல்வி பழனிசாமி
ஜல்லிகட்டு நிகழ்வை மீண்டும் கொண்டு வந்தவர் ஓ.பி.எஸ்., அதே போல் கச்சதீவை மீனவர்களுக்காக மீட்பார். பிரதமர் போட்டியிட விரும்பிய தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். இந்த ஒரு தொகுதி 40 தொகுதிக்கு சமம்.
திமுகவிற்கு சாதகமான வேலைகளை தான் எடப்பாடி செய்து வருகிறார். அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வேட்பாளர்களில் எத்தனை பன்னீர் செல்வம் வந்தாலும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ன் வெற்றி உறுதி. 5 வேட்பாளர்களுக்கான சுவரொட்டி ஒரே அச்சகத்தில் தயார் செய்து உள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் யின் வெற்றியை எடப்பாடி குழுவின் சதிதான் என்பது உறுதி செய்கிறது. ஒரு மனிதனுக்கு அரசியலில் கடைசி பக்கம் என்பதே கிடையாது. பாரத பிரதமர் போட்டியிட ஆசை பட்ட தொகுதியை , ஓ.பி.எஸ் க்கு கொடுத்து உள்ளனர். 4அரை வருடங்கள் முத்தலாக் சட்டம், CAA உள்ளிட்ட சட்டங்களுக்கு அவரது எடப்பாடி ஆட்சி காலத்தில் பாஜக ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது நாடகமாடுகிறார். எடப்பாடிக்கு சருகுகாலம் தொடங்கி விட்டது. ஓ.பி.எஸ் க்கு நல்ல காலம் தொடங்கி விட்டது. ஜூன் 4 க்கு பிறகு ஓ.பி.எஸ்., விஸ்வரூபம் எடுப்பார். அதிமுக அவர் தலைமையில் வரும். ஓ.பி.எஸ்., என்ற எரிமலை வெடிக்கும். எடப்பாடிக்கு தோல்வி உறுதி. வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எடப்பாடிக்கு ஒரு பதவி உயர்வை வழங்கும். 10 தோல்வி பழனிசாமி என அழைக்கப்படுவார். நவாஸ் கனி யை, பலா கனி வெல்லும். அரசியல் கணக்கு எங்களுக்கு சாதகமாக உள்ளது என்று பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கவுன்சிலராகவே முடியாத அண்ணாமலை வாய்க் கொழுப்பில் பேசுகிறார் - ஆர்.பி. உதயகுமார் பேச்சு
மேலும் செய்திகள் படிக்க - கவுன்சிலராகவே முடியாத அண்ணாமலை வாய்க் கொழுப்பில் பேசுகிறார் - ஆர்.பி. உதயகுமார் பேச்சு