வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டி இருக்கிறார். இதனை அடுத்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவருக்கு ஆதரவாக இன்று தேனி மாவட்டம் கம்பம் நகரில் வடக்குப்பட்டி பகுதி நாட்டு கல், வ உ சி திடல், உள்ளிட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்   தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.




முன்னதாக கம்பம் நகருக்கு வருகை புரிந்த அமைச்சர் வேட்பாளர் மற்றும் தேனீ தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் முன்னதாக தேனி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் எம்எல்ஏ திராவிட முன்னேற்ற கழக அரசு செய்திட்ட சாதனைகளை எடுத்துரைத்து தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஆதரவாக உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.




அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பிடிஆர் பழனி தியாகராஜன் அவர்கள் பேசுவையில், "தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஏன் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக உரையாட வந்திருக்கிறோம். 2019 தேர்தலில் தமிழக முழுவதும் திராவிட முன்னேற்ற வெற்றி பெற்ற சூழ்நிலையில் கழகத்தின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த சூழ்நிலையில் ஒரே ஒரு தவறு நடந்தது. என்னவென்றால் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் பெறவில்லை அது தேனி மட்டும்தான்.


எனது சொந்த தொகுதியில் கழக வேட்பாளர் தோல்வியுற்றது மிகவும் வருத்தமாக இருந்தது. அதிகாரத்தை மிகவும தவறாக பயன்படுத்தி பாஜகவுக்கு அடிமையாக செயல்படும் ஐந்தாண்டுகள் தேவைக்காக அன்றைய அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைத்தார்கள். போன முறை இந்தப் பகுதியில் விட்டுவிட்டீர்கள் , இந்த முறை சிறப்பாக கழக கழகத்தின் வேட்பாளரை ஜெயிக்க வைப்பீர்கள் என நம்புகின்றேன். இன்றைக்கு நாட்டையே கொடூரமான பாதைக்கு சென்று 10 ஆண்டுகள் பொருளாதாரத்தை முடக்கி வேலை வாய்ப்பின்மையை மிகவும் அதிகரித்து, மனித உரிமைகளை பறித்து, மாநில நீதி உரிமைகளையும், சுயாட்சி முறையையும், பாதாளத்தில் தள்ளி பாசிச சர்வாதிகாரிகள் பத்தாண்டுகள் இந்த நாட்டை தவறான பாதையில் கொண்டு சென்றுள்ளனர்.




இன்னும் சொல்லப்போனால் பணநாயகம் என்ற விஷயத்தை வைத்து ஜனநாயகத்தை முழுமையாக படுகொலை செய்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த பாசிசவாதிகளை ஜூன் 4ஆம் தேதி முதல் ஒரு நாள் ஆட்சி நடத்த விட்டால் இதுவரை இருந்த இந்திய நாடு, சுதந்திர மனிதனுக்கு உரிமை சுயமரியாதை சமூகத்தில் நல்லிணக்கம் சமத்துவம் என்பதெல்லாம் விரைவில் அழிந்துவிடும் பாசிச காரர்கள் உடைய  இலக்கே இதுதான். இந்த தேர்தலில் நல்லவர்கள், வல்லவர்கள்  என்பதை தாண்டி தவறானவர்களுக்குவாக்களிக்க கூடாது  என்பதை கருதி வாக்களிக்க வேண்டும். அதிமுக சொல்கிறார்கள் பாஜகவிடம் சேரவில்லை என்று  ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது நான் ஒரு நாள் கூட பாஜகவில் இணைய மாட்டேன் என கூறினார்.


ஆனால், அம்மையாரின் மறைவுக்கு பின்னர் இவர்கள் பாஜகவுடன் இணைந்து 4 ஆண்டுகள் அவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தனர்.  அவர்களுக்கு அடிமையாகி  ஆட்சியை நடத்திய பிறகு ஆட்சி பிறகு திடீரென்று அதிமுகவினருக்கு சுயமரியாதை சுய சிந்தனை உள்ளிட்டவைகள் வருகிறது. உண்மையிலேயே பிரிந்து விட்டால் ஏன் போன ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மேல் வழக்குகள் தொடர வேண்டும் என்று ஆதாரத்தை தமிழக அரசு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, ஆளுநருக்கு இது குறித்த அனைத்து ஆதாரங்கள் கொடுத்த பிறகும் கோப்புகளை எல்லாம் நிறுத்தி வைத்துள்ளார். 




மறைமுக கூட்டணி இல்லை என்றால் எப்போது அவர் கையெழுத்து விட்டு கொடுத்திருக்கலாம். சாதாரண ஒரு தேர்தலில் எங்களுக்காக வாக்களியுங்கள் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம் என கேட்டு வரவில்லை ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் உங்களிடம் கேட்பது உங்களுக்காக உங்கள் குடும்பகளுக்காக உங்கள் தலைமுறைக்காக ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களாட்சியின் அடிப்படையில் மாநில அரசின் உரிமை இருந்து உங்களுடைய வாக்குக்கும் சட்டமன்றத்திற்கும் பஞ்சாயத்துகள் அனைத்திற்கும் தலைநிமிர்ந்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கும் என்ற பேசினார். இரண்டாவது விடுதலை பெறும் நாளாக கருதி ஏப்ரல் 19ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாக்குகளை வழங்குங்கள் என கேட்கிறேன்" என்று பேசினார்.