✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Nellai ADMK: நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்; ஜான்சி ராணி போட்டி; எதனால்?

செல்வகுமார்   |  23 Mar 2024 06:54 PM (IST)

Nellai ADMK: நெல்லை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டு ஜான்சி ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லையில் ஜான்சி ராணி போட்டி

நெல்லை அதிமுக வேட்பாளர்  சிம்லா முத்துச்சோழன் திடீர் மாற்றம் செய்யப்பட்டு ஜான்சி ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜான்சி ராணி, திருநெல்வேலி மாவட்ட கழக இணைச் செயலாளராகவும் திசையன்விளை பேரூராட்சியின் சேர்மன் ஆகவும் உள்ளார். இவர் முன்னாள் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகவும் இருந்துள்ளார்.

சிம்லா முத்து சோழன்:

திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சற்குண‌பாண்டியனின் இரண்டாவது மருமகள்தான் இந்த சிம்லா முத்து சோழன். (தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். அவரின் அரசியல் வாரிசாக இருந்த சிம்லா முத்து சோழன் தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டு வந்தார். 

இந்த சூழலில் கடந்த 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, கட்சியிலும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, திமுக கட்சியில் இருந்து தன்னை தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த சிம்லா முத்து சோழன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து, நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

ஜான்சி ராணி போட்டி:

இந்நிலையில், சிம்லா முத்து சோழனுக்கு எதிராக குரல்கள் எழுந்ததாக கூறப்பட்டடது. அதையடுத்து, தற்போது சிம்லா முத்து சோழனுக்கு பதிலாக திசையன்விளை சேர்மன் ஜான்சி ராணி நிறுத்தப்படுவார் என்று பேச்சுக்கள் எழுந்து வந்த நிலையில், வேட்பாளராக அதிமுக கட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலானது வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கட்சி பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 

நெல்லை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக நயினார் நாகேந்திரனும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ( இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை ) களமிறங்குகிறார். 

Also Read: ADMK: கோவைக்கு வேலுமணி, தேனிக்கு உதயகுமார்- 40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Published at: 23 Mar 2024 06:03 PM (IST)
Tags: @admk Nellai Lok Sabha 2024
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • Nellai ADMK: நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்; ஜான்சி ராணி போட்டி; எதனால்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.