தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது அனைத்துக் கட்சி முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் பிரச்சார பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ள ரமேஷ் சென்னிதலா ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து வாக்கு சேகரித்தார் பின்னர் செய்தியாளரிடம் பேசும் போது தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி அமோக வெற்றி பெறும்.
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சு தவறான உதாரணம், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு கொடுத்த மரியாதையையும் அத்வானி தலைவராக இருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி அவருக்கு கொடுத்த மரியாதையும் பார்த்தாலே காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கு மன வித்தியாசம் தெரியும் என்றும்யாரையும் மதிக்க தெரியாத குணம் படைத்த மோடி காங்கிரஸ் மீது வசை பாடி வருகிறார் அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை இது கண்டிக்கத்தக்கது என்றார்.
நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ் மக்களின் உணர்வு, இது வடக்கு தெற்கு என பிரச்சனை இல்லை , பாஜகவிற்கு ஆதரவு எதிர்ப்பு என்ற நிலை இல்லை.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் CBSE ஆக மாற்ற 10 ஆண்டு காலம் ஆகும் ஆகவே நீட் தேர்வு வேண்டாம் என்பது மாணவர்களின் உரிமை இதில் அரசியல் இல்லை. மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அதை மறுத்து பேச ஆளுநர் யார் ? ஜனாதிபதி யார் ?, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யபடும் என கூறினார்.