ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த பின்னர் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அங்கீரரிக்கப்பட்ட கட்சிகள் தொடங்கி லெட்ட்ர் பேட் கட்சிகள் வரை அனைத்தும் எதிர்நோக்கி காத்திருப்பது 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்தான். இந்த தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளில் மொத்தம் 28 கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் பாஜக தான் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மட்டும் இல்லாமல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியில் உள்ள மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளையும் இணைத்து வரும் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தத்தமது சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் வியூகங்களைத் தீவிரமாக வகுத்து வருகின்றன. குறிப்பாக I.N.D.I.A கூட்டணியில் மாநிலங்களில் பலமாக உள்ள கட்சியின் தலைமையில்தான் கூட்டணி என வியூகங்கள் வகுத்து வருகின்றன. இதுமட்டும் இல்லாமல் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சுகளும் அடிப்பட்டு வருகின்றது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளை தக்கவைக்க முடியுமா இல்லையா என்பதை அறிய ஏபிபி மற்றும் சிவோட்டர் மக்களை அணுகியது.
கருத்துக்கணிப்பின்படி, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி மற்றும் அமித் ஷா ஆகியோர் தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என தெரியவருகின்றது. அஜய் குமார் தேனி, சோனியா காந்தி மற்றும் சிராக் பாஸ்வான் ஆகியோர் வெற்றி பெற்றாலும் வெற்றி வித்தியாசம் குறைவான அளவிலே இருக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் ஏபிபி மற்றும் சி- வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் இடம்பெற்ற ஸ்டார் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கீழே காணலாம்.
மக்களவைத் தேர்தலில் 50 ஸ்டார் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம்
- வாரணாசி - நரேந்திர மோடி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- அசம்கர் - தாதன் ஷௌகத் அலி யாதவ் (வெற்றி பெறுவது சிரமம்)
- லக்னோ - ராஜ்நாத் சிங் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- மெயின்புரி - டிம்பிள் யாதவ் (குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- கோரக்பூர் - ரவிகாந்த் சுக்லா (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- காசியாபாத் - சுரேஷ் பன்சால் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- முசாபர்நகர் - சஞ்சீவ் பல்யான் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- அமேதி - ஸ்மிருதி இரானி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- ரேபரேலி - சோனியா காந்தி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது). சோனியா காந்தி தானே தொகுதியில் போட்டியிடவில்லை என்றால், பேபரோலி தொகுதியில் போட்டி நிலவும்.
- லக்கிம்பூர் கெரி - அஜய் சிங் சவுகான் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- பிரயாக்ராஜ் - ரீட்டா பகுகுணா ஜோஷி (கணிசமான வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- மீரட் - ஜிவிதேஷ் பாஜ்பாய் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- கன்னோஜ் - சுப்ரத் பதக் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- பிலிபிட் - வருண் காந்தி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- மதுரா - ஹேமா மாலினி (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- கௌதம் புத்த நகர் - மகேஷ் சர்மா (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- மிர்சாபூர் - அனுப்ரியா படேல் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- உன்னாவ் - சாக்ஷி மகாராஜ் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- அம்ரோஹா - டேனிஷ் அலி (வெற்றி பெறுவது சிரமம்)
- காஜிபூர் - அப்சல் அன்சாரி (வெற்றி பெறுவது சிரமம்)
- பெகுசராய் - கிரிராஜ் சிங் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- பட்லிபுத்ரா - ராம் கிரிபால் யாதவ் (வெற்றி பெறுவது சிரமம்)
- பக்சர் - அஷ்வினி சௌபே (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- ஹாஜிபூர் - பசுபதி குமார் பராஸ் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- ஜமுய் - சிராக் பாஸ்வான் முன்னிலையில் உள்ளார் (குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- உஜியார்பூர் - நித்யானந்த் ராய் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- மோதிஹாரி - ராதா மோகன் சிங் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- அர்ரா - ராஜ் குமார் சிங் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- கோடா - நிஷிகாந்த் துபாய் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- கோடெர்மா - அன்னபூர்ணா தேவி (குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- குந்தி - அர்ஜுன் முண்டா (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- வயநாடு - ராகுல் காந்தி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- நைனிடால் - அஜய் பட் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- ஹமிர்பூர் - அனுராக் தாக்கூர் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- பிகானர் - அர்ஜுன் மேக்வால் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- சித்தோர்கர் - சிபி ஜோஷி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- ஜலவர் - துஷ்யந்த் சிங் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- ஜோத்பூர் - கஜேந்திர சிங் ஷெகாவத் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- நாகௌர் - ஹனுமான் பெனிவால் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- சிந்த்வாரா - நகுல் நாத் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- போபால் - பிரக்யா தாக்கூர் (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- கஜுராஹோ - விஷ்ணு தத் சர்மா (குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- வடக்கு டெல்லி - மனோஜ் திவாரி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- புது தில்லி - மீனாட்சி லேகி (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- தெற்கு டெல்லி - கவுதம் கம்பீர் (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- காந்திநகர் - அமித் ஷா (கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- மும்பை வடக்கு மத்திய தொகுதி - பூனம் மகாஜன் (கணிசமான வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- கல்யாண் - ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- ஹக்லி - லாக்கெட் சாட்டர்ஜி (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)
- பஹரம்பூர் - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி (சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது)