மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி ஆளூநர் சக்திகந்த தாஸ் பதவி விலக வேண்டும் என மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் வெடிகுண்டுகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.




ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்னஞ்சலை "கிலாபத் இந்தியா" அனுப்பியதாகவும், நாட்டில் ஒரு பெரிய "ஊழல்" நடப்பதாக நிதி நிறுவனங்களை அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.  மும்பையில் மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


எச்சரிக்கை குறித்து ரிசர்வ் வங்கி காவல் துறையிடம் தகவல் தெரிவித்தவுடன், மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட இடங்களில் காவல் துறையினர் தேடுதல் நடத்தினர்.  பிற்பகல் 2:15 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குறிப்பிடப்பட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் நடத்திய முழுமையான சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல் துரை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதைத்தொடர்ந்து மும்பை போலீசார் எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரிசர்வ் வங்கி மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து "இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலில்" நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மிரட்டல் மின்னஞ்சலில் குறிப்புடப்பட்டுள்ளது.  


இந்த இ-மெயில் ’Khilafat India' என்ற அமைப்பால் அனுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.