சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது, ”சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக இளைஞரணி மாநாட்டில் எந்தவித தவறும் நடக்கவில்லை. அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மாநாடு நடைபெற்றது. மக்கள் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி வெற்றி பெற செய்ய வேண்டும். அவ்வாறு, சேலம் மக்கள் வெற்றிபெற செய்தால் நான் ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். மாதத்திற்கு இரண்டு நாட்கள் சேலத்தில் தங்கி சேலம் நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை முதல்வரிடம் எடுத்துச் சென்று நூறு சதவீதம் தீர்த்து வைப்பேன். எந்த தொகுதியையும் பார்க்க மாட்டேன் சேலம் தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் தேசத்தில் வெற்றி பெற செய்தீர்களா என்றுதான் பார்ப்பேன்” என்று பேசினார்.



தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். போன தேர்தலில் விரட்டியடித்தது போன்று இந்த தேர்தலிலும் விரட்டியடிக்க வேண்டும். பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தலின் போதுதான் தமிழகத்திற்கு வருகிறார். சேலத்தில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டும்தான் திமுகவிற்கு வெற்றிபெற செய்து அனுப்பி வைத்தீர்கள். குறிப்பாக எடப்பாடி தொகுதியில் பெரிய நாமத்தை திமுகவிற்கு மக்கள் போட்டீர்கள். இந்திய கூட்டணி கட்சி வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளும் அகற்றப்படும். தமிழகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனவர் திமுக தலைவர் ஸ்டாலின் யார் காலிலும் விழவில்லை தவழ்ந்தும் செல்லவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத புகைப்படமாக இந்த புகைப்படம் மாறி உள்ளது என்று அதிமுக 


பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை காண்பித்து விமர்சனம் செய்தார். உலக வரலாற்றில் இவ்வாறு முதலமைச்சர் ஆனார் என்றால் இவர் மட்டும்தான். தன்னை வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கும், எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று யோசிக்கும் அளவிற்கு சேவை செய்வேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதான் திராவிட மாடல் என்று கூறினார்.


சசிகலாவின் மூலமாக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி. பின்னர் யார் இந்த சசிகலா என்று கேள்வி எழுப்பினார். சசிகலாவுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் துரோகம் செய்தார். அதேபோன்று, பிரதமர் தேர்தலின் போது அடிக்கடி தமிழகம் வருகிறார். கொரோனா தொற்றின் போது மத்தியில் இருந்து பிரதமர் வந்து பார்த்தாரா? என்று கேள்வி எழுப்பினார். மக்கள் சாலையில் நடந்து சென்றார் கைது செய்வேன் என்று கூறியவர் பிரதமர் மோடி. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொரோனா வார்டிற்கு சென்று ஆய்வு செய்த உலகிலே முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.


மகளிர் கட்டணமில்லாத பேருந்து திட்டத்தில் 4565 கோடி பயணங்கள் மேற்கொண்டு உள்ளீர்கள். சொன்னால் நம்பனும் சிரிக்க கூடாது என்று கூறினார். தமிழக அரசுக்கு மட்டுமில்லாமல் இது மகளிர் காண வெற்றி. பெண்களுக்கு எந்தவித உரிமைகளும் கிடையாது. பெண்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மீட்டுக் கொடுத்தவர் பெரியார். அவர் வழியில் வந்த பிறகு அண்ணா பல உரிமைகளுக்காக போராடினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தவர் கருணாநிதி. இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் 27 சதவீதம். ஆனால் தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 54 சதவீதமாகும் இதுதான் பெண்களுக்கான வெற்றி. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கடும் நிதி நெருக்கடி இடையே ஒரு கோடி 60 லட்சம் பேர் விண்ணப்பித்து நிலையில், ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பித்தவர்கள் சிலர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரிபார்ப்பு செய்யப்பட்டு வருகிறது.தகுதி வாய்ந்த மகளிர் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக வந்து சேரும். ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் கொடுத்த முதல்வருக்கு, மீதமுள்ள மகளிருக்கு கொடுக்க மாட்டாரா என்று கேள்வி எழுப்பினார். 



வெள்ள நிவாரண பாதிப்பிற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நடைபெற்றது. அந்த அடிக்கல் நாட்டப்பட்ட கல் இதுதான் என்று செங்கலை எடுத்துக் காண்பித்தார். தற்போது கல்லை நான் எடுத்து வந்து விட்டேன் கல்லை காணும் என்று தேடி வருகிறார்கள். பாஜக ஆளுகின்ற ஆறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது ஆனால் தமிழகத்திற்கு நிதி இல்லை என்று கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எங்கு சென்றாலும், அவருக்கு என்னுடைய நினைவுதான். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று கூறியது தான் அண்ணா. ஆர்.என்.ரவி அல்ல; ஆர்எஸ்எஸ் ரவி சங்கி ரவி என்று விமர்சனம் செய்தார். ஆளுநர் ஒரு தபால்காரர் தான்... முதல்வர் கொடுப்பதை டெல்லிக்கு சென்று கொடுக்க வேண்டும் அதுதான் அவருக்கு வேலை. மாயி திரைப்படத்தில் வடிவேலு காமெடியில் வருவது போன்று வா... மா மின்னல் என்று கூறுவது போன்று சட்டமன்றத்திற்கு ஆளுநர் எப்பொழுது வருகிறார், எப்பொழுது செல்கிறார் என்று தெரியாது. சுயமரியாதை உள்ளவர்கள் தான் எடப்பாடி தொகுதி.


எடப்பாடி தொகுதியில் வந்ததாக கூறும் சுயமரியாதை இல்லாத நபர் தான் எடப்பாடி பழனிசாமி. நல்லது செய்வார் என்று வாக்களித்தீர்கள் ஏதாவது நல்லது செய்தாரா என்று கேள்வி எழுப்பினார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார், எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டுவார்கள் என்று கேட்டால் அதற்கு பதில் மத்திய அரசுதான் கூற வேண்டும்; ஆனால் அதற்கு பதில் எடப்பாடி பழனிசாமி தான் கோபப்படுகிறார். பாஜகவுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கள்ளக்காதல் உள்ளது. சமூக நீதிக்காக கட்சி துவங்கியதாக கூறும் பாமக. மனுநீதி பேசும் பாஜகவுடன் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது என்று கூறினார்.