விழுப்புரம் : தமிழக வெற்றி கழக தலைவர் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்துவிட்டார் என அமைச்சர் பொன்முடி பேசினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மேலும் திமுக பாமக, நாம் தமிழர் கட்சியென அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்பட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, முதல்வர் செய்து வரும் நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக பொதுமக்களிடம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் புதியதாக ஒருத்தர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். பொதுமக்கள் விஜய் என கத்தியவுடன், அமைச்சர் பொன்முடி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் என்ன பண்ணுவாரோ, என்ன செய்வாரோ என நினைத்துக் கொண்டிருந்தோம்.ச்ஆனால் அவரும் திராவிட மாடல ஆட்சிக்கு வந்து விட்டார்.
அவர் நீட் தேர்வு கூடாது என்றும், மாநிலங்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும், கல்வியும் சுகாதாரமும் மாநில பட்டியலில் வரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் முதல்வர் சட்டமன்றத்தில் நீட் தேர்வு எதிரான சட்டம் இயற்றியதற்கு வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். அவர் உண்மையுள்ள திராவிட உணர்வும் தமிழ் உணர்வுள்ளவரின் பேச்சு என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.