தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று நகர்ப்புற ஊராட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடிப்பட்டி பேரூராட்சியில் 9ஆவது வார்டு அ.தி.மு.க வேட்பாளரை தி.மு.கவினர் கடத்தி வைத்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி அ.தி.மு.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 18 வார்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9 வது வார்டில் தி.மு.க., சார்பில் முன்னாள் பேரூராட்சித்தலைவர் கிருஷ்ணவேணியும், அ.தி.மு.க., சார்பில் இந்திராணியும் நேரடியாக போட்டியிடுகின்றனர். தி.மு.கவினர் வேட்பாளரை போட்டியின்றி அன்னபோஸ்ட் ஆக தேர்வு செய்ய அ.தி.மு.க வேட்பாளரை தி.மு.கவினர் கடத்தி வைத்துள்ளதாகவும் வாபஸ் வாங்க சொல்லி மிரட்டுவதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 



 

அ.தி.மு.க பொறுப்பாளர் சோனை கூறுகையில், வாடிப்பட்டியில் உள்ள  18 வார்டுகளில் 7 அ.தி.மு.க வேட்பாளர்கள் மனுவை திரும்பபெற செய்தனர். ஏற்கனவே நாங்கள் மீண்டும் அ.தி.மு.க சார்பில் புதிய வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய வைத்தோம். இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளரை தி.மு.க.வினர் கடத்தி வைத்துள்ளதாகவும், எங்கள் வேட்பாளர் வரும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.



 

இந்த போரட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருடம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா பேரூர் பொறுப்பாளர் சோனை, கூட்டுறவு சங்க துணை தலைவர் அசோக் குமார் மற்றும் பேரூராட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக வேட்பாளர் இந்திராணி தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். 

 

அதிமுக வேட்பாளர் இந்திராணி தனது மனுவை வாபஸ்பெற்ற நிலையில் அதே வார்டில் திமுக வேட்பாளராக களம் கானும் கிருஷ்ணவேணி அன்னப்போஸ்டாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.