டாய்லெட்டில் அதிகம் நேரம் அமர்ந்துக்கொண்டு செல்போனைப் பயன்படுத்தும் போது மலக்குடலில் ஆசனவாயின் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால்  மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன


இன்றைக்கு நம்மில் பலரும் 24 மணிநேரமும் செல்போனைப்பயன்படுத்துகிறோம்.. நடந்து செல்லும் போது, சாப்பிடும்போது, நண்பர்களுடன் பேசும் போது, வேலை நேரத்தில்,தூங்கும் முன்பு வரை என அனைத்து நேரங்களில் நம்முடைய கைகளில் செல்போன்கள் இருந்துக்கொண்டேதான் இருக்கும். இதற்கெல்லாம் ஒரு படி மேல் டாய்லெட்டிற்கு செல்லும்போதும்கூட செல்போனைப் பயன்படுத்துகிறோம். நீங்களும் இதேபோன்று செய்கிறீர்களா? அப்படின்னா பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.



சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்துகொண்டு செல்போன்களைப் பல மணிநேரம் பயன்படுத்தும்போது, மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது எனவும் இதனால் அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து உள்ளதாக மருத்துவர் ஜார்விஸ் எச்சரித்துள்ளார். இதோடு பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் போன்ற காரணங்களால் மூலம் நோய் வரும் ஆபத்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக இதுபோன்ற பிரச்சனைகள் உடனே ஏற்படாது எனவும், மூலம் போன்ற நோய்கள் நீண்ட நேரம் அமர்வதாலும் ஏற்படாது. ஆனால் தினந்தோறும் இதேப் போன்று மேற்கொள்ளும் போது மூல நோய் உண்டாகிறது என்று ஆய்வு கூறுகிறது.  இது செல்போன் பயன்படுத்துவதால் மட்டுமில்லை, முன் புத்தக்கத்தை டாய்லெட்டில் அமர்ந்து படிக்கும் பழக்கம் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இதுப்போன்ற பாதிப்பு வருவதற்கு முன்னதாக ஆசனவாயில் எரிச்சல், அரிப்பு,  ரச்சக்கசிவு,  கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவை அறிகுறிகளாக உள்ளன. எனவே இதுப்போன்ற அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.


முன்னதாக வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட  நேரம்  அங்கேயே இருந்தமையாலும், சீனாவில் மணிக்கணக்கில் செல்போன் பயன்படுத்தியதில் அவரின் குடலே வெளியே வந்துவிட்டதாக செய்திகள் வைரலாகப்பரவியது குறிப்பிடத்தக்கது.



இப்பிரச்சனைகளைத் தவிர்க்க என்ன செய்வது?


இதுபோன்று நீங்களும் உங்களது வாழ்வில் இச்செயல்களைச் செய்து வருவதால், மேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டாலும் இதனைத் தவிர்க்க முயல வேண்டும். குறிப்பாக மூல  நோய் வராமல் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள்,  தினமும் உடற்பயிற்சி, டாய்லெட்டிற்கு செல்ஃபோன் எடுத்துச் செல்வதைத் தவிர்த்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ளுங்கள் என்று  மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு தொழில்நுட்ப சாதனத்தினால் தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படாமல் இனி வரும் காலங்களில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.