மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் அடுத்த மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. இந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் உள்ளது. அதற்கான பரப்புரையில் பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பா.ஜ.க. இன்று தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 195 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 72 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் யார்? யார்? அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.


பிரபலங்கள்:



  • மத்திய அமைச்சர் நிதின் கட்காரி – மகாராஷ்ட்ராவின் நாக்பூர் தொகுதியில் போட்டி

  • மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் – மகாராஷ்ட்ராவின் மும்பை வடக்கு தொகுதியில் போட்டி

  • மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி – தவாத் தொகுதியில் போட்டி

  • மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் – ஹமிர்பூர் தொகுதியில் போட்டி

  • ஹர்ஷ் மல்கோத்ரா - டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டி

  • ராவ் இந்தர்ஜித்சிங் - குர்கான் தொகுதியில் போட்டி

  • கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை – காவேரி தொகுதியில் போட்டி

  • பங்கஜ் முண்டே - மகாராஷ்ட்ராவின் பீட் தொகுதியில் போட்டி

  • அனில் பலூனி - உத்தரகாண்ட்டினஜ் கார்வால் தொகுதியில் போட்டி

  • உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் – ஹரித்வார் தொகுதியில் போட்டி

  • தேஜஸ்வி சூர்யா - பெங்களூர் தெற்கில் போட்டி

  • ஷோபா கரண்லாஜே – பெங்களூர் வடக்கில் போட்டி


இந்த முக்கிய பிரபலங்களில் மிகவும் பிரபலமானவர்கள் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, அனுராக்சிங் தாக்கூர், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ராவத் ஆகியோர் ஆவர்.


இவர்கள் தங்களுக்கான பரப்புரையில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் நிலையில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. பெரும்பாலான மாநிலங்களில் தங்களது கூட்டணிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ள நிலையில், பரப்புரையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பா.ஜ.க. பலவீனமாக உள்ள மாநிலங்கள், தொகுதிகளில் அதன் மூத்த தலைவர்களே நேரடியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இந்தாண்டு மட்டும் 4 முறை வந்துள்ளார்.


மேலும் படிக்க: BJP Candidates List: மக்களவைத் தேர்தலுக்கான பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


மேலும் படிக்க: Ponmudi: மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி; அமைச்சராக பதவியேற்பு எப்போது?