✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

EPS: 'அ.தி.மு.க. இருக்காதுனா சொல்ற..தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வின் அடையாளமே இருக்காது' - எடப்பாடியார் ஆவேசம்

செல்வகுமார்   |  31 Mar 2024 06:14 PM (IST)

EPS: தேர்தலுக்கு பிறகு பாஜகவின் அடையாளமே இருக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டம்

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என பேசிய பாஜக மதுரை வேட்பாளர் ராம சீனிவாசன் பேசிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். 

மக்களவை தேர்தல்:

17வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் மூன்று அணிகளும் கூட்டணிகளுடனும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என  களம் காண்கின்றன.  

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சியின் தலைவர்கள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சிதம்பரத்தில் பரப்பிரை மேற்கொண்டார்.

Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு - ஜெயலலிதாவின் அரசியல் களம்

இபிஎஸ் காட்டம்:

சிதம்பரத்தில், அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்து வரும் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், நான் தொண்டர்களின் ஒருவன். தொண்டர்களின் என்னம் எதுவோ அதை தான் நான் செய்வேன். அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என பேசிய பாஜக மதுரை வேட்பாளர் ராம சீனிவாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ”அ.தி.மு.க. இருக்காதுனா சொல்ற, தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வின் அடையாளமே இருக்காது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பேசினார்.

மேலும் திமுக ஆட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்து கட்டணங்களும் விடியா ஆட்சியில் உயர்ந்துவிட்டது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று இபிஎஸ் தெரிவித்தார்.

Also Read: Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு - ஜெயலலிதாவின் அரசியல் களம்

Published at: 31 Mar 2024 05:49 PM (IST)
Tags: @admk BJP EPS Elections 2024 loksabha 2024 Loksabha Election
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • EPS: 'அ.தி.மு.க. இருக்காதுனா சொல்ற..தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வின் அடையாளமே இருக்காது' - எடப்பாடியார் ஆவேசம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.