Lok Shaba Election Results 2024: மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி பின்னடவை சந்தித்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்திய மக்களவை தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் பாஜக அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். 


மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக உள்ள அவர் கடந்த முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 4,67,598 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட ராகுல் காந்தி 4,13,394 வாக்குகள் பெற்றனர். இதனால் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். ராகுல் காந்தி எதிர்பாராத தோல்வி கிடைத்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். 






இதனிடையே இம்முறை அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் கே.எல்.சர்மா களமிறக்கப்பட்டார். இருவரும் தீவிர பரப்புரை மேற்கொண்ட நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஸ்மிருதி இரானி பின்னடவை சந்தித்தார். கிட்டதட்ட 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளதால் ஸ்மிருதி இரானியின் தோல்வி உறுதியாகியுள்ளது. இதனிடையே பாஜக பின்னடைவை சந்தித்ததால் பாஜக தேர்தல் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினர். இதனிடையே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.