7 கட்ட மக்களவை தேர்தல்:


18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக பதவியேற்ற சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக அறிவித்தனர். 


அதில், இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடைபெறும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்தார். 


முதல் கட்ட தேர்தல்:


முதல்கட்டத்தில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரதல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு (39 தொகுதி), புதுச்சேரி (ஒரு தொகுதி), சத்தீஸ்கர் (ஒரு தொகுதி), மிசோரம் (ஒரு தொகுதி), நாகலாந்து (ஒரு தொகுதி), சிக்கிம் (ஒரு தொகுதி), திரிபுரா (ஒரு தொகுதி), அந்தமான் (ஒரு தொகுதி), ஜம்மு காஷ்மீர் (ஒரு தொகுதி), மேற்கு வங்கம் (3 தொகுதி), உத்தரகாண்ட் (5 தொகுதி), உத்தர பிரதேசம் (8 தொகுதி), ராஜஸ்தான் (12 தொகுதி), மேகாலயா (2 தொகுதி), மணிப்பூர் (2 தொகுதி), மகராஷ்டிரா (5 தொகுதி), மத்திய பிரதேசம் (6 தொகுதி), பீகார் (4 தொகுதி), அசாம் (5 தொகுதி), அருணாச்சல பிரதேசம் (2 தொகுதி), மேற்கு வங்கம் (3 தொகுதி) ஆகிய மாநிலங்களில் முதற்கட்டமாக ஏப்ரதல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 


இரண்டாம் கட்ட தேர்தல்:


இரண்டாம் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, அசாம் (5 தொகுதி), பீகார் (5 தொகுதி), சத்தீஸ்கர் (3 தொகுதி), கர்நாடகா (14 தொகுதி), கேரளா (20 தொகுதி), மத்திய பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8 தொகுதி), மணிப்பூர் (2 தொகுதி), ராஜஸ்தான் (13 தொகுதி), திரிபுரா (ஒரு தொகுதி), உத்தர பிரதேசம் (8 தொகுதி), மேற்கு வங்கம் (3 தொகுதி), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி) ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. 


மூன்றாம் கட்ட தேர்தல்:


மூன்றாம் கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, அசாம் (4 தொகுதி), பீகார் (5 தொகுதி), சத்தீஸ்கர் (7 தொகுதி), கோவா (2 தொகுதி), குஜராத் (26 தொகுதி), கர்நாடகா (14 தொகுதி), மத்திய பிரதேசம் (8 தொகுதி), மகாராஷ்ரா (11 தொகுதி), உத்தர பிரதேசம் (10 தொகுதி), மேற்கு வங்கம் (4 தொகுதி), ஜம்மு காஷ்மீர் (ஒரு தொகுதி), டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி (2 தொகுதி) ஆகிய இடங்களில் மே 7 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


நான்காம் கட்ட தேர்தல்:


நான்காம் கட்டத்தில் 96 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, ஆந்திர பிரதேசம் (25 தொகுதி), பீகார் (5 தொகுதி), ஜார்க்கண்ட் (4 தொகுதி), மத்திய பிரதேசம் (8 தொகுதி), மகாராஷ்டிரா (11 தொகுதி), ஒடிசா (4 தொகுதி), தெலங்கானா (17 தொகுதி), உத்தர பிரதேசம் (13 தொகுதி), மேற்கு வங்கம் (8 தொகுதி), ஜம்மு காஷ்மீர் (ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


ஐந்தாம் கட்ட தேர்தல்:


ஐந்தாம் கட்டத்தில் 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, பீகார் (5 தொகுதி), ஜார்க்கண்ட் (3 தொகுதி), மகாராஷ்ரா (13 தொகுதி), ஒடிசா (5 தொகுதி), உத்தர பிரதேசம் (14 தொகுதி), மேற்கு வங்கம் (7 தொகுதி), ஜம்மு காஷ்மீர் (ஒரு தொகுதி), லடாக் (ஒரு தொகுதி) ஆகிய இடங்களில் மே 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


ஆறாம் கட்ட தேர்தல்:


ஆறாம் கட்டத்தில் 57 தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, சத்தீஸ்கர் (8 தொகுதி), ஹரியானா (10 தொகுதி), ஜார்க்கண்ட் (4 தொகுதி), ஒடிசா (6 தொகுதி), உத்தர பிரதேசம் (14 தொகுதி), மேற்கு வங்கம் (8 தொகுதி), டெல்லி (7 தொகுதி) ஆகிய மாநிலங்களில் மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


ஏழாம் கட்ட தேர்தல்:


ஏழாம் கட்டத்தில் 57 தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, பீகார் (8 தொகுதி), இமாச்சல் பிரதேசம் (4 தொகுதி), ஜார்க்கண்ட் (3 தொகுதி), ஒடிசா (6 தொகுதி), பஞ்சாப் (13 தொகுதி), உத்தர பிரதேசம் (13 தொகுதி), மேற்கு வங்கம் (9 தொகுதி), சத்தீஸ்கர் (ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.