நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி சென்னையில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சென்னையில் சென்னை வடக்கு, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19.04.2024 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க..
BJP Candidate List: கோவையில் அண்ணாமலை.. தென்சென்னையில் தமிழிசை.. வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
Lok Sabha Election 2024: சேலத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் முதல் செயல்வீரர்கள் கூட்டம்