என்னென்ன தேவை?


ப்ரோக்கோலி - 2


வெண்ணெய் - ஒரு கப்


பூண்டு - 1 


வெங்காயம் - 3


உப்பு - தேவையான அளவு,


மஞ்சள் - ஒரு சிட்டிகை


மிளகு தூள் - 1/4 டீ ஸ்பூன்


மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்


சீரக தூள் - 1/2 டீ ஸ்பூன்


சீஸ் ஸ்லைஸ் - 2


ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப் 


இத்தாலியன் சீசனிங் - ஒரு டீ ஸ்பூன்


சில்லி ஃப்ளேகஸ் - ஒரு டீ ஸ்பூன்



ப்ரோக்கோலி மசாலா செய்முறை:


ப்ரோக்கோலியை சுத்தம் செய்து, நன்றாக வேக வைத்து எடுக்கவும். ரொம்ப குழைய வேக வைக்க கூடாது. 


அடுப்பில், மிதமான தீயில், பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். அதில், பொடியாக நறுக்கிய பூண்டு 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். நன்றாக வதங்கியது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். 


வெங்காயம் பிடிக்கும் என்பவர்கள், 4 -5 வெங்காயம் கூட சேர்க்கலாம். இதோடு, மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு, சீரக தூள் ஆகியவற்றை 1/2 டீ ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது, ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும். 


இந்த நிலையில், சீஸ் ஸ்லைஸ் இரண்டையும் சேர்த்து, அதோடு ஃப்ரெஷ் க்ரீம், இத்தாலியன் ஸ்பைஸ் மிக்ஸ், சில்லி ஃப்ளேக்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும். நன்றாக மசாலா சேர்ந்ததும் இதோடு வேக வைத்த ப்ரோக்கோலியை சேர்த்து நன்றாக கிளறவும்.


3- நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும். ப்ரோக்கோலி க்ரேவி நன்றாக கெட்டியாக மாறும் வரை அடுப்பிலேயே இருக்கட்டும். கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.  


இந்த க்ரேவியை சப்பாத்தி, தோசை என இரண்டிற்கும் சேர்க்கலாம். ஹேர்ப் ரைஸ், நெய் சோறு சேர்த்தும் சாப்பிடலாம்.


ஹெர்ப் ரைஸ் செய்முறை:


பாசுமதி அரிசி அல்லது எந்த அரிசி என்றாலும் வேக வைப்பதற்கு முன்பு 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். சாதத்தை வேக வைத்து எடுத்து தனியே வைக்கவும். கொஞ்சம் ஆறியிருந்தாலும் நன்றாக இருக்கும்.


இப்போது, அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய், நெய் சேர்த்து அதில் நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி, சேர்த்து நன்றாக கிளறி, அதோடு வேக வைத்த சாதத்தை சேர்க்கவும். இதற்கான தனியே நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் பொரித்துத்தெடுத்து சேர்த்தால் ஸ்பிரிங் ஆனியன் ரெடி. ப்ரோக்கோலி மசாலாவிற்கு இந்த  ஹெர்ப் ரைஸ் நல்ல காம்பினேசன்.