18வது மக்களவைத் தேர்தலுக்கு ஒட்டுமொத்த நாடும் தயாராகியுள்ளது. அதன்படி இன்று தொடங்கி ஜூன் இரண்டாம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் 18 மாநிலங்களும் மூன்று யூனியன் பிரதேசங்களும் அடங்கும். 

முதல்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 102 தொகுதிகள் குறித்து இங்கு காணலாம். 

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் முதல் கட்டத் தேர்தலில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அதிகபட்சமாக ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில்  முதற்கட்ட வாக்குப்பதிவில் 8 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளைக் கொண்ட மத்தியபிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும் மட்டும் முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறவுள்ளது.  மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 14 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கும் மற்றும் உத்தரகாண்டில் மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கும்  முதற்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டத் தேர்தலின்போது வாக்குபதிவு நடைபெறவுள்ளது. மேற்குவங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகாளில் மூன்று தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  மணிப்பூர், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில்  உள்ள தலா இரண்டு தொகுதிகளுக்கும் முதல்கட்ட தேர்தலின்போதே வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

 

வ.எண் மாநிலத்தின் பெயர் மற்றும் மொத்தம் உள்ள தொகுதிகள் தேர்தல் நடைபெறும் தொகுதிகள்
1.  தமிழ்நாடு (39)  39
2.  ராஜஸ்தான் (25) 12
3. உத்தரபிரதேசம் (80) 08
4. மத்தியபிரதேசம் (29) 06
5. மஹாராஷ்ட்ரா (48) 05
6. அசாம் (14) 05
7. உத்தரகாண்ட் (05) 05
8. பீகார் (40) 04
9. மேற்கு வங்கம் (42) 03
10. மணிப்பூர் (02) 02
11.  மேகாலயா (02) 02
12.  அருணச்சல பிரதேசம் (02) 02
13.  ஜம்மு காஷ்மீர் (06) 01
14.  சத்தீஷகர் (11) 01
15.  மிசோரம் (01) 01
16 நாகலாந்து (01) 01
17.  சிக்கிம் (01) 01
18. திரிபுரா (02) 01
19.  அந்தமான் (01) 01 
20.  லட்சத்தீவு (01) 01
21. புதுச்சேரி (01) 01
 

 

மொத்தம் 

 102 தொகுதிகள்

 

ஆறு தொதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும், சத்தீஷகரரில் உள்ள 11 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கும், ஒற்றைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களான மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றிக்கும் முதற்கட்ட தேர்தலின்போதே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டு தொகுதிகளைக் கொண்ட  திரிபுராவில் ஒரு தொகுதிக்கு மட்டும் முதற்கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடைபெறவுள்ளது. 

இத்துடன் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் மற்றும் லட்சதீவுக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

முதற்கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதி வரை அதாவது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.