சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4,15,794 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.


Sivagangai Lok sabha Election Results 2024: நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மீண்டும் அமோக வெற்றி பெற தி.மு.க. கூட்டணியும், எதிர்க்கட்சியின் பலத்தை நிரூபிக்க அ.தி.மு.க. கூட்டணியும், தமிழ்நாட்டில் தங்கள் பலத்தை காட்ட பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணியும் களத்தில் இறங்கியுள்ளன.


சிவகங்கை:


தென் தமிழகத்தில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்று சிவகங்கை. முன்னாள் மத்திய நிதியமைச்சரின் சொந்த ஊர் அமைந்துள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதிகளில் எப்போதும் ஒன்றாகும். சிவகங்கை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.


காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில், ஆலங்குடி மற்றும் திருமயத்தை தவிர மற்ற தொகுதிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகள் ஆகும்.


கை ஓங்குமா? தாமரை மலருமா?


சிவகங்கை தொகுதியில் நடப்பு மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம், அ.தி.மு.க. சார்பில் சேவியர் தாஸ், பா.ஜ.க. சார்பில் தேவநாதன் யாதவ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி களமிறங்கியுள்ளனர்.


சிவகங்கை தொகுதியைப் பொறுத்தவரையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 ஆகும். நடப்பு தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 10 லட்சத்து 49 ஆயிரத்து 887 ஆகும். வாக்குப்பதிவு சதவீதம் 64.26 ஆகும்.  சிவகங்கையைப் பொறுத்தவரை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீண்டும் எம்.பி.யாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளார்.  அதேசமயம், பா.ஜ.க. சார்பில் களமிறங்கியுள்ள தேவநாதனும் வெற்றி பெறவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Election Results 2024 LIVE: நாடே எதிர்பார்ப்பு, மக்களவை தேர்தல் முடிவுகள் - உடனுக்குடன் அறிய Abpnadu-உடன் இணைந்திருங்கள்..!


மேலும் படிக்க: Exit Poll 2024: பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் திமுக.. இந்தியா கூட்டணிக்கு இனிப்பை தந்த தமிழ்நாடு!