சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் செல்வகணபதி 5,44,238 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.


Lok Sabha Election Results 2024: நாட்டையே இந்தாண்டு தொடக்கம் முதலே பரபரப்பிலே மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதனால், ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே அடுத்து ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.


சேலம் மக்களவைத் தொகுதி:


தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கை  ஓங்கப்போகிறதா? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆதிக்கம் செலுத்துமா? பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி திரும்பி பார்க்க வைப்பார்களா? நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  


அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் தமிழ்நாட்டின் முக்கியமான மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் செல்வகணபதி, பா.ம.க. சார்பில் அண்ணாதுரை, அ.தி.மு.க. சார்பில் விக்னேஷ் மற்றும் நாம் தமிழர் சார்பில் மனோஜ்குமார் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.


சேலம் தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் மட்டும் 12 லட்சத்து 96 ஆயிரத்து 481 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதாவது, சேலம் தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


கைப்பற்றப்போவது யார்?


எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தை கைப்பற்றியே தீர வேண்டும் என்று அ.தி.மு.க. முழுமூச்சில் இறங்கி வேலை செய்தது. கடந்த முறை வெற்றி பெற்ற பார்த்திபனுக்கு பதிலாக செல்வகணபதிக்கு வாய்ப்பு அளித்துள்ள தி.மு.க. இந்த முறையும் சேலத்தில் வெற்றி பெற முனைப்பு காட்டி தேர்தல் பணியாற்றியது.


பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வும் இந்த தொகுதியில் வெற்றி பெற பெற தீவிர களப்பணியாற்றியது. இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளருக்கும் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்த தொகுதியில் வெற்றி பெறப்போவது யார்? என்று சேலம் தொகுதி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.