பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமி 5,30,128 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.


நாடு முழுவதும் நடைபெற்ற 7 கட்ட மக்களவைத் தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. கொங்கு மண்டலத்தில் மிகவும் முக்கியமான மக்களவைத் தொகுதியாக இருப்பது பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி.


பொள்ளாச்சி தொகுதி:


பொள்ளாச்சி தொகுதிக்கு கீழே பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொங்கு மண்டலமானது அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. ஆனாலும், கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அங்கு வெற்றி பெற்றது.


இந்த முறை பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஈஸ்வரசாமி, அ.தி.மு.க. சார்பில் அப்புசாமி கார்த்திகேயன், பா.ஜ.க. சார்பில் வசந்தராஜன் மற்றும் நாம் தமிழர் சார்பில் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். பொள்ளாச்சியில் மொத்தம் 15 லட்சத்து 97 ஆயிரத்து 467 வாக்காளர்கள் உள்ளனர். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 743 பேர் வாக்களித்தனர். அதாவது, பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம் 70.41 சதவீத வாக்குகள் பதிவாகியது.


கைப்பற்றப்போவது யார்?


பொள்ளாச்சியைப் பொறுத்தவரை மீண்டும் தொகுதியை கைப்பற்ற தி.மு.க.வும், மீண்டும் தங்கள் கோட்டையை அ.தி.மு.க. கைப்பற்றவும் திட்டமிட்டு பரப்புரையில் ஈடுபட்டனர். இதனால், தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் அப்புசாமி கார்த்திகேயனுக்கும் இடையே இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி காணப்படும் என்று கருதப்படுகிறது.