Lok Sabha Election Results 2024: நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகியது.
கடும் சவால் தரும் காங்கிரஸ்:
ஆனால், அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் விதமாக காலை முதல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணியினர் பா.ஜ.க. கூட்டணிக்கு சவால் அளிக்கும் விதமாக பல இடங்களில் முன்னணியில் இருந்து வருகின்றனர். நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் ஆதரவு கிட்டினால் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பையும் இந்தியா கூட்டணி பெறும் என்பதால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த சூழலில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு ராகுல் காந்தி தனது காரில் வந்தார்.
ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து கூறிய தொண்டர்:
அப்போது, எதிரே உள்ள சாலையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் காங்கிரஸ் உடையுடன் காங்கிரஸ் கட்சியின் கொடியுடன் ஆர்ப்பரித்துச் சென்றிருந்தார். அப்போது, அந்த தொண்டரை பார்த்த ராகுல்காந்தி அருகில் வரச் சொல்லி அழைத்தார். ராகுல் காந்தியை பார்த்த மகிழ்ச்சியில் அவரும் அந்த கம்பி வேலியை தாண்டி குதித்து சென்றார்.
அந்த தொண்டருக்கு ராகுல் காந்தி கைகொடுத்தார். ராகுல் காந்தியை பார்த்த மகிழ்ச்சியில் அவரும் ராகுல் காந்திக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினார். அப்போது, ராகுல் காந்தியை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை அந்த தொண்டர் வெளிப்படுத்தினார்.
நாட்டில் அதிக பாதுகாப்பு கொண்ட தலைவர்களில் ஒருவர் ராகுல் காந்தி. உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட தலைவரில் ஒருவரான ராகுல் காந்தியை, வழியில் சென்ற தொண்டர் மிக எளிதில் சந்தித்து வாழ்த்து கூறிய சம்பவத்தை அங்கிருந்தவர் வீடியோவாக எடுத்தவர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களில் முன்னணியில் உள்ளது. பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னணியில் உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வும், இந்தியா கூட்டணியும் முனைப்பு காட்டி வருவதால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இதனால், மத்தியில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: AP Election Results 2024: 4வது முறையாக ஆட்சி அமைக்கும் சந்திரபாபு நாயுடு.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..
மேலும் படிக்க: Raebareli Lok Sabha Results 2024: வயநாடு, ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவாரா ராகுல் காந்தி? முன்னிலையில் காங்கிரஸ்