Lok Sabha Election: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  


மக்களவை தேர்தல்:


இந்திய நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 


வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல், ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவை தேர்தலை தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தருணத்தில் வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


12 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்:


தேர்தல் நாளன்று வாக்களிக்கும் போது, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கண்காணிப்பாளரிடம் காண்பித்து தங்களது ஓட்டை போட வேண்டும். ஒருவேளை, உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்தற்காக பின்வரும் மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த 12 ஆவணங்கள் என்னவென்று என்பதை பின்வருமாறு பார்க்கலாம். 


12 ஆவணங்கள் என்னென்ன?



  • ஆதார் கார்டு

  • பான் கார்டு

  • ஓட்டுநர் உரிமம்

  • பாஸ்போர்ட்

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அடையாள அட்டை

  • மருத்துவ காப்பீட்டு அட்டை

  • வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள்

  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

  • மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களில் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை

  • நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை

  • சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை


மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்தி தங்களது ஓட்டுகளை செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Lok Sabha Election: எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன் - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு


DMK vs AIADMK vs BJP: அனல் தெறிக்கும் தேர்தல் களம்: 40 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் யார்?- முழு பட்டியல்