பல ஆண்டு காலமாக சிறையில்லுள்ள 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர் ஸ்டாலின் , முன்னால் முதல்வர்,இபிஎஸ்,ஆளுநர் ஆகியோருக்கு நன்றி என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திருமண வரவேற்பில் பங்கேற்க வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்:


விடுதலை:


தமிழக சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை மத,பேதமின்றி விடுவிக்க வேண்டும். முதற்கட்டமாக 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர், எடப்பாடி பழனிசாமி,ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 


யாருடன் கூட்டணி:


ஏழ்வர் விடுதலைக்காக போராடி, உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்தபோதும் ராபர்ட் பயாஸ், சாந்தன்,ஜெயக்குமார் ஆகிய மூவரை முகாமில் வைத்திருப்பதும் அதுவும் சிறைதான் என்பதால் ராபர்ட் பயாசை வெளிநாட்டிற்கும், சாந்தனை இலங்கைக்கும், ஜெயக்குமாரை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திட முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை, தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே கூட்டணி குறித்து கட்சியினர் கூடி முடிவெடுப்போம் என பேசினார்.