பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு தான் ஆற்றிய பணிகளை தன்னுடைய Progress Report-ஆக வழங்கி உள்ளதாக, அந்தத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யர்மலை, குளித்தலை நகராட்சி, பணிக்கம்பட்டி, இனுங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு திரட்டினார். அப்போது குட்டப்பட்டி நால்ரோடு பகுதியில் பேசிய அவர், தான் செய்த பணிகளை புத்தகமாக வழங்கியுள்ளதாகவும், அதை தன்னுடைய Progress Report ஆக மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, 118 கோடி ரூபாய் செலவு செய்து ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதில், மன நிறைவு அடைந்துள்ளதாக பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
குளித்தலை பேருந்து நிலையம் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியினர் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர், டாக்டர் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேசிய அவர், MP நிதியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு42 வகுப்பறைகள், ரேசன் கடை, மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளிட்ட பணிகள் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். 2019 தேர்தல் வாக்குறுதியின் படி, 118 கோடி ரூபாய் செலவு செய்து ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதில், மன நிறைவு அடைந்துள்ளதாக கூறினார். தான் மீண்டும் எம்.பி ஆனால் 1500 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, உயர் மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
உங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை விடுத்தார். தான் பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழ் நாட்டில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் எனவும், ஊழல் கட்சி என்று திமுகவை உலகமே கூறுவதாக டாக்டர் பாரிவேந்தர் பேசினார்.
தொடர்ந்து குளித்தலை பெரிய பாலம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், மக்களது கோரிக்கையான வாழைப்பழ பவுடர் செய்யும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பெரம்பலூர் நகரத்தில் ஓட்டு கேட்டு சென்ற பாஜக நிர்வாகியை. திமுகவினர் வெட்டியதாக பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து பனிக்கப்பட்டி கிராமத்தில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தான் MP-ஆக செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டு பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக மோடி ஆட்சியமைக்க உள்ளதாகவும், மோடியின் கரங்களை வலுப்படுத்த தாமரைக்கு வாக்களியுங்கள் என பாரிவேந்தர் தெரிவித்தார்.
தொடர்ந்து இனுங்கூர் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது நல்லூர் ஏரிக்கு நீர் வருவதற்கான வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். MP யாக செய்த பணிகள் குறித்து, புத்தகமாக உங்களுக்கு வழங்கி உள்ளதாகவும், இது போன்று எந்த எம்பி யாராவது செய்துள்ளார்களா? என கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக மோடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், உலக நாடுகள் மோடியை பெருமை கொள்வதாகவும் புகழாரம் சூட்டினார். குளித்தலை ரயில்வே மேம்பாலம் அடிக்கல் நாட்டப்பட்டு, விரைவில் பணிகள் நடைபெற உள்ளதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
இதனையடுத்து நங்கவரம் கிராமத்தில் பரப்புரை செய்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மேளதாளம் முழங்க தேசிய ஜனநாயக கூட்டணி யினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், MP நிதியினை, தான் முழுமையாக செலவு செய்து தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்டார். குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமென்றால், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஓட்டு போட்டு ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது எனப் பேசினார்.
திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர், கூட்டணி அமைத்து மக்களை வேட்டையாடி வருவதாக, பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில், வாக்கு சேகரிப்பின் போது திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரால், பாஜக நிர்வாகிகள் கந்தசாமி மற்றும் லட்சுமணன் ஆகியோர் தாக்கப்பட்டனர். தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக நிர்வாகிகளை பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், திமுகவினர் அவர்களது ரவுடித்தனத்தை காட்டி விட்டார்கள் என்றும், தேர்தல் நேரத்தில் இது போன்ற அடாவடி செயல்கள் ஏற்புடையதல்ல எனவும் சாடினார். பெரம்பலூர் தொகுதியில் தான் வெற்றி பெறுவேன் என்று பரவலாக பேசப்படுவதால், தோல்வி பயத்தில் இரண்டு நபர்களை தாக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். போலீசின் வழக்கு தொடர்பான பணிகள் நிறைவு பெற்ற பிறகு, தாக்குதலுக்கு உள்ளானவர்களை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கு அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகையான ஆயிரம் ரூபாயை 3 வருடங்களுக்கு பிறகு தான், திமுக அரசு கொடுத்துள்ளதாக பெரம்பலூர் தொகுதி, ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார்.
தேனூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தரை, கூட்டணி கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பேசிய பாரிவேந்தர், தான் MP யாக செய்த பணிகள் குறித்து புத்தகமாக எழுதி பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வழங்கியதாக குறிப்பிட்டார். இதுபோன்ற புத்தகம் போடுவதற்கு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, துணிவு வேண்டும் என அவர் பேசினார். தன்னுடைய MP நிதி 17 கோடி ரூபாயை முழுமையாக செலவு செய்து உள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்லி, பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய் சொல்லியே ஆள்கின்றனர் என விமர்சித்தார். ஆயிரம் ரூபாய் உரிமை தொகை 3 வருடங்களுக்கு பிறகு தான் திமுக அரசு கொடுத்துள்ளதாகவும், உலக மகா பொய்களை, தமிழ்நாட்டில் உள்ளிட்ட திமுகவினர் பேசுவதாகவும் அவர் கூறினார். நீங்கள் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,ஊழல் கட்சிகளிலிருந்து வருபவர்களை தவிர்க்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் ஐஜேகே கட்சியினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நத்தக்காடு கிராமத்தில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேசிய அவர், பொய் சொல்வதற்கே திமுகவினர் வருவார்கள் என கூறினார். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள், ஊழல்வாதிகளை மறந்து விடுங்கள் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து கண்ணப்பாடி கிராமத்திற்கு சென்ற டாக்டர் பாரிவேந்தரை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கு திரண்ட பொதுமக்களிடம் டாக்டர் பாரிவேந்தர் வாக்கு சேகரித்தார்.