இந்திய அளவில் சிறந்து விளங்கும் ABP செய்தி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தமிழின் முதல் டிஜிட்டல் செய்தி தளமான ஏபிபி நாடு 3 ஆண்டுகள் முடிந்து இன்று 4-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 


கொல்கத்தாவில் நூறு வருட பாரம்பரியமிக்க செய்தி நிறுவனமான ABP குழுமத்தின் ஓர் அங்கமான ABP Nadu தமிழ்நாட்டில் கால் பதித்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தமிழ் மாநிலம் மட்டுமின்றி நாடு மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் செய்திகளை தக்க நேரத்தில் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியைச்  செய்து வருகிறது. அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் முக்கிய கட்டுரைகள் மற்றும் செய்திகளை வலுவாகவும், தைரியமாக சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளது.



கடந்த 3 ஆண்டுகளில் மக்களிடையே மிகப்பெரிய அளவில் சென்றடைந்ததோடு மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் ABP Nadu செய்தித்தளம் மற்றும் யூ ட்யூப் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ComScore எனப்படும் ஊடக மதிப்பீடு தரவரிசையில் நமது ABP Nadu  முன்னணி ஊடக வரிசையில்  இருக்கிறது. இதேபோல் மாதந்தோறும் சராசரியாக 70 லட்சம் பேர் எந்தவித விளம்பரமும் இல்லாமல் புதிதாக நமது செய்தி தளத்திற்கு வருகை தருகின்றனர். இதேபோல் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 கோடி பேர் நமது ABP Nadu தளத்தில் செய்திகளை படிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டையும் ஒப்பிடும்போது கூகுள் தேடலில் ABP Nadu செய்திகள் பயனாளர்களை சென்றடைவது 67.30% அதிகரித்துள்ளது. 


ஏபிபி நாடுவின் யூ ட்யூப்-பில், இதுவரை 59 கோடி பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, 1.04 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, பலம் வாய்ந்த முன்னணி யூ ட்யூப் ஊடகமாக ஏபிபி நாடு திகழ்கிறது.  அதுமட்டுமல்ல, சமூக வலைதளத்தில் முக்கியமான ஃபேஸ்புக்கிலும் தனது முத்திரையை பதித்துள்ளது ஏபிபி நாடு. முகநூல் பக்கத்தில் 550 ஆயிரம் பேர் ஃபாலோவர்ஸும், இளைஞர்களின் அமோக ஆதரவுப் பெற்ற இன்ஸ்டாக்ராமில்  204 ஆயிரம் ஃபாலோவர்ஸும் பெற்று, முன்னணி ஊடகமாக சமூகவலைதளத்தில் வலம் வருகிறது ஏபிபி நாடு. 



4 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு, தமிழகத்தின் முதல் குடிமகன் முதல் கடைக்கோடி பாமரன் வரை அனைவரும் அவரவர் பாணியில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.  அரசியல் செய்திகளின் நாயகர்களான பெரும்பாலான தலைவர்களும், சினிமா உலகின் நட்சத்திரங்கள், வணிக உலகின் சாதனையாளர்கள், விளையாட்டின் முன்னணி வெற்றியாளர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இடமின்மை காரணமாக, பெயர்களைக் குறிப்பிடவில்லை. புற்றீசல்போல் ஊடகங்கள் பெருகி காணப்படும் டிஜிட்டல் உலகில், ஏபிபி நாடு சேனல் பிரத்யேகமாக தனக்கென தனி சந்தாராரர்கள், பார்வையாளர்களை கொண்டுள்ளதை குறிப்பிட்டுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இப்படித்தான் டிஜிட்டல் ஊடகம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏபிபி நாடு முன்மாதிரியாக இருப்பதாகப் பாராட்டியுள்ளனர். 


ஏபிபி  செய்திக்குழுமம், பெங்காலி மொழியில் தொடங்கி, தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம்,தெலுங்கு என பல மொழிகளில் டிஜிட்டல், தொலைக்காட்சி, நாளிதழ் என இந்தியாவின் மிகப்பெரிய ஊடக ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுமத்தில் இருந்து, தென்னகத்தில் முதலில் உருவான ஏபிபி நாடு, ஆரம்பித்த காலத்தில் இருந்தே, வாசிப்பாளர்கள், பார்வையாளர்கள் ஆதரவுடன்  டிஜிட்டல் உலகின் தனி முத்திரைப் பதித்து வருகிறது.
 
தைரியமான, பக்கச்சார்பின்றி, உள்ளதை உள்ளபடி  சொல்லும் ஊடகத் தர்மத்தை கடைப்பிடித்து வரும் ஏபிபி நாடு, லேட்டஸ்ட் நியூஸ் லேட்டஸ்ட் தமிழர்களுக்காக என்ற அடைமொழியுடன், உங்களின் முன்னணி டிஜிட்டல் தளமாக பரிணமித்து, ஜொலித்து வருகிறது. இன்று போல் என்றென்றும் உங்கள் ஆதரவுடன், உங்களுக்கான செய்திகளுடன் உங்களைத் தேடி வரும் முதல் டிஜிட்டல்  ஊடகமாக ஏபிபி நாடு எப்போதும்  இருக்கும் என்று இந்த ஆண்டில் உறுதி தருகிறது ஏபிபி நாடு செய்திக்குழு.