விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் எதிரே விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.களஞ்சியம் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்தோஷ் குமார் ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.


சீமான் மேடைப்பேச்சு-


எண்ணற்ற உரிமைகளை இழந்து நிற்கிற என் இனத்தின் மக்கள் சொந்த நிலத்திலேயே உரிமையை இழந்து உணர்வு எழுந்து அடிமையாக நிற்கக்கூடிய ஒரு தேசிய இனத்தின் மக்கள், நீர் உரிமையை இழந்தோம். முல்லைப் பெரியாற்றிலே எங்களுக்கான உரிமையை இழந்தும் பெற நினைக்கிறோம் பெற முடியவில்லை. பெற மறுப்பது காங்கிரஸ் கட்சி பாஜக கட்சி ஆட்சிகள், அவ்வாறு காவிரி ஆற்றிலும் நீர் உரிமையை இழந்து நிற்கிறோம். இதற்கும் காரணம் அவர்கள் தான். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களுக்காக ஓட்டு கேட்டு அவர்களுக்கு ஓட்டு அளித்தும் நிற்கிறார்கள்.


சூரியனுக்கு ஓட்டு போடவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் கூட நிறுத்திவிட்டு செல்வோம்,


மக்கள், எவன் என் உரிமையை தர மறுக்கிறானோ, எவன் என் உரிமையை தட்டிப் பறிக்கிறானோ, எவன் என் உரிமையை பெற்று தராமல் இருக்கிறானோ, அவனுக்கே வாக்களித்து வலிமைப்படுத்த செய்வது எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், இப்படி ஒரு இனமாவது வாழ்ந்ததா என்பதை வரலாற்றை நீங்கள் புரட்டி பார்க்க வேண்டும், வரலாற்றில் வீரனுக்கும் தோல்வியுற்றவனுக்கும் வரலாறு இருக்கிறது. ஆனால் அடிமைகளுக்கு வரலாறே இல்லை கோழைகளுக்கும் இல்லை. எனவே நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள், திமுக எப்படி வாக்கு கேட்கிறது என்றால் தாய்மார்கள் இடத்தில் சூரியனுக்கு ஓட்டு போடவில்லை என்றால் உங்களுக்கு வரும் ஆயிரம் ரூபாய் கூட நிறுத்திவிட்டு செல்வோம், எனக் கூறி ஓட்டு கேட்டார்கள். இவர்கள் இதற்கெல்லாம் கட்சி வைத்திருப்பதற்கு தூக்கில் தொங்கி சாகலாம், இவர் கட்சி இது ஒரு திராவிட மாடல் இதற்கு ஒரு தலைவர், இப்ப தெரிகிறதா தேர்தல் அரசியல் என்றால் என்ன மக்கள் அரசியல் என்றால் என்ன என்று, கட்சி ஆட்சிகளால் எல்லாம் இதை சரி செய்ய முடியாது.


புரட்சி ஒன்றால் மட்டுமே இதை மாற்ற முடியும் அதற்கு என் தம்பிகள் தயாராக இருக்க வேண்டும், புரட்சிக்கு நீ தயாராகும் வரை இந்த அநீதி அக்கிரமம் தொடரும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் புதிய கட்சி பல நூற்றாண்டுகள் ஆண்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, சாராயம் விற்ற காசிலே ஆட்சியை நடத்த ஆரம்பித்த கட்சி திமுக.


சாதியை தொட்டவுடன் போதை ஏறும்


டைரக்டர் லோகேஷ் கனகராஜ் போதைப் பொருள் குறித்து படம் எடுத்துள்ளார். அதை போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளீர்கள் நீங்கள், சாரே கடையில் இருந்து தப்பித்து வெளியில் வர முடியாது. கஞ்சா, அபின், கொக்கேன் ஆகிய மயக்கத்தில் இருந்து நீ வெளியில் வரக்கூடாது. அவர்களுக்கு முதல் மயக்கம் சாதி, கள்ளச்சாராயம் கூட குடித்தால் தான் போதை ஏறும். ஆனால் சாதியை தொட்டவுடன் போதை ஏறும், உங்களை எப்படி பிரித்துள்ளார்கள் என்று  பாருங்கள் கன்னியாகுமரிக்கு சென்றால் ஒரே சமுதாயம் அதை இந்து நாடார் கிருத்துவ நாடார் என்றும், தூத்துக்குடிக்கு வந்தால் தேவர், தேவேந்திரர் என அவர்களுக்கு ஒன்றுதான் பிரிக்கணும் ஆனால் நமக்கு ஒன்றுதான் சேர்க்கணும். இதுதான் பிரச்சனை, திராவிடம் தமிழ் தேசிய மக்களை பிரித்து அதிகாரத்திற்கு வர துடிக்கும், தமிழ் தேசியம் ஒன்றிணைத்து வலிமை பெற்று அதிகாரத்துக்கு வர துடிக்கும், இதுதான் இங்குள்ள பிரச்சினை படையாட்சியும் பறையனும் ஒன்றானால் அவன் வெல்ல முடியாது தேவரும் தேவேந்திரனும் உன்னால் அவன் வெல்ல முடியாது.


சொந்த ரத்தங்களுக்குள் யுத்தம்


எனவே தமிழ் தேசியப் பிள்ளைகள் ஒன்றாகாமல் வெல்ல முடியாது இதுதான் அரசியல், நீங்கள் பறையனை நிறுத்தினால் படையாட்சியர்கள் ஓட்டு போட மாட்டார்கள் இவ்வாறு சொந்த ரத்தங்களுக்குள் யுத்தம் உடன் பிறந்தவர்களுக்குள் பகை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நிலம், ஒரே காற்று இவ்வாறு வாழும் தேசிய பிள்ளைகளுக்கு இல்லை சண்டை, படையாட்சியரும் தேவனும் ஒன்றானால் ஏது கருணாநிதி ஏது எம்ஜிஆர் ஏது ஜெயலலிதா, ஏது ஸ்டாலின் ஏது மோடி ஏது ராகுல் காந்தி, ஹிந்தி பேசக்கூடிய வட இந்தியாவில் இருக்கக்கூடிய ஒருவர் எப்படி உங்களுக்கு தலைவரானார்.


ஒரு சொட்டு தண்ணீர் வாங்கி கொடுக்க துப்பில்லை


எந்த ஹிந்தி காரர்கள் தமிழனை தலைவராக ஏற்றுள்ளனர், இத்தாலியில் இருந்து சோனியா வந்தாலும் தலைவி, ஹிந்தி காரன் வந்தாலும் தலைவன் அதில் எவனாவது ஒருத்தன் தமிழ் மகனை தலைவராக்கி உள்ளாரா, ஒரு சொட்டு தண்ணீர் வாங்கி கொடுக்க துப்பில்லை.  ஆனால் ஓட்டு கேட்டு வருகிறார்கள் மானங்கெட்டவர்கள், தன்மானம் இருந்தால் தமிழ்நாடு இருக்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது, 850 பேரை சுட்டார்கள் அதற்கு தோட்டா வழங்கியது இவர்கள் போர்க்கப்பல் பரிசு திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுத்தவர்கள் சிங்கள ராணுவ வீரர்கள், மக்களுடைய பிரச்சினையை பேசி ஓட்டு கேட்கிறார்களா பணம் கொடுத்து தான் ஓட்டு கேட்கிறார்கள்.


சிறந்த மருத்துவம்


எனவேதான் நான் விதைகளை விதைத்துக் கொண்டுள்ளேன். அதில் 32 லட்சம் விதைகளை விதைத்துள்ளது இன்னும் விதைத்து கொண்டுதான் இருக்கிறேன் அதுவும் விளைந்து கொண்டுதான் இருக்கிறது, இன்னும் எத்தனை லட்சம் விதைகிறது என்று பார்ப்போம், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி கல்விக்கு ஏற்ற வேலை அதற்கு ஏற்ற சம்பளம், நோயாளிகளை ஆகச் சிறந்த மருத்துவம் உயிர்காக்கு மருத்துவம் நோயாளிகள் உருவாகாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதால்தான் இந்த தேர்தலில் 16 மருத்துவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளேன்.


 பசி இல்லாத தேசம்


பசி இல்லாத தேசம் மக்களின் வறுமை இல்லாத தேசம் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்த நாடு எல்லாருக்கும் வேலை அவரவர் வாழ்விடத்திலே, ஆகச் சிறந்த கல்வி அவரவர் வாழ்விடத்திலேயே இதுதான் என்னுடைய கோட்பாடு, எதற்காக இப்பொழுது மோடி கச்சத்தீவை பற்றி பேசுகிறார்கள். நாங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் மீட்போம் திருக்குறளை பற்றி பேசுகிறார்கள். இதெல்லாம் ஓட்டுக்காக இது தேர்தல் அரசியல் தேர்தல் வரும்போது சிலிண்டர் 200 ரூபாய் குறைந்தால் அது தேர்தல் அரசியல், தேர்தல் வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே சிலிண்டர் குறைந்தால் அது மக்கள் அரசியல், வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் தலைவர் பிரபாகரன் மீது ஆணையாக உறுதியளிக்கும் போது ஒரு நொடி ஆடி போய் திரும்பி பார்ப்பார்கள் இந்தியா கண்டமே அதிரும் யாரை பயங்கரவாதி தீவிரவாதி என குற்றம் சுமத்தி சிறை செல்ல வைத்தார்களோ அவரின் பெயரிலேயே நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று அதே பாராளுமன்றத்தில் உறுதிமொழி ஏற்பார்கள். அதற்கான வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே உங்களை நம்பி நான் இவர்களை உங்களிடம் விட்டு செல்கிறேன். நீங்கள் தான் வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறினார்.