காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024 (Kanchipuram Lok Sabha Constituency 2024)
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்த பொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) ,செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
வாக்காளர்களின் விவரம்
வ.எண் |
தொகுதியின் பெயர் |
ஆண் வாக்காளர்கள் |
பெண் வாக்காளர்கள் |
மூன்றாம் பாலின வாக்காளர்கள் |
மொத்த வாக்காளர்கள் |
18–19 வயது உள்ளோர் |
1 | உத்திரமேரூர் | 128070 | 137839 | 41 | 265950 | 2980 |
2 | காஞ்சிபுரம் | 149806 | 160297 | 21 | 310124 |
3606 |
4 |
32.செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி |
2,03,837 |
2,11,209 |
63 |
4,15,109 |
4303 |
5 |
33.திருப்போரூர் சட்டமன்ற தொகுதி |
1,46,163 |
1,51,318 |
51 |
2,97,532 |
4650 |
6 |
34.செய்யூர் சட்டமன்ற தொகுதி (தனி) |
1,08,555 |
1,12,075 |
26 |
2,20,656 |
3122 |
7 |
நெ.35.மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி (தனி) |
1,09,585 |
1,13,898 |
92 |
2,23,575 |
3793 |
|
மொத்தம் |
846016 |
886636 |
294 |
1732946 |
22454 |
வெற்றி பெற்றவர்கள்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், 1951 கிருஷ்ணசாமி ( காமன்வீல் கட்சி ) காஞ்சிபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
யாருடைய கோட்டை ?
செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில்
காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2014 தேர்தல் நிலவரம்
அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 4,99,395 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 3,52,529 வாக்குகளை பெற்றார். மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2021 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
காஞ்சிபுரம் - எழிலரசன் ( திமுக )
உத்திரமேரூர் - சுந்தர் ( திமுக=
செங்கல்பட்டு - வரலட்சுமி ( திமுக )
திருப்போரூர் - எஸ். எஸ்.பாலாஜி (விசிக)
செய்யூர் - பாபு (விசிக)
மதுராந்தகம் - மரகதம் (அதிமுக)
உத்திரமேரூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் செயல்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் 18 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 436 கேள்விகள் எழுப்பியுள்ளார். ஒரு தனி நபர் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளார். 82 சதவீத வருகை பதிவை வைத்துள்ளார். காஞ்சிபுரத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ரயில்வே பாலம், அமைக்கும் பணியை பலமுறை ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. பல ஊர்களில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதி நேரத்திலும் தொடர்ந்து, பணிகளை செய்து வருவது பாதகமாக பார்க்கப்படுகிறது.
மக்களின் கோரிக்கை என்ன ?
* கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். கைத்தறி தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சேலத்தில் உள்ளதை போன்ற, இந்திய கைத்தறி தொழில்நுட்பம் நிறுவனம் மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட வேண்டும்
* தங்கத்தின் விலை உயர்வால் ஜரிகை விலை உயர்ந்து வருவதால், விலையை கட்டுக்குள் வைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
* நெசவாளர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த, மருத்துவ காப்பீடு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதே போன்று மருத்துவ காப்பீட்டுக்கான தொகையும் உயர்த்தப்பட வேண்டும்.
* செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டு செயல்படாமல் இருப்பதால் அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
* மேல்மருவத்தூர் வரை சென்னை கடற்கரையில் இருந்து இயங்கும் தொடர் வண்டிகளை இயக்க வேண்டும்
* காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வரை கூடுதலாக ஒரு ரயில் தண்டவாளம் அமைக்க வேண்டும்.
* செய்யூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.