Insurance Surrender Policy: பாலிசியை சரண்டர் செய்யும் போது, மீதமுள்ள பிரீமியத்தின் மீது காப்பீட்டு நிறுவனங்கள் சரண்டர் கட்டணங்கள் விதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
காப்பீட்டு திட்டங்களுக்கான சரண்டர் விதிகள்:
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள், பல்வேறு வகைகளில் காப்பீட்டு திட்டங்களை எடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து பிரீமியம் தொகையை கட்ட முடியாமல் பாலிசி காலம் முடிவடைவதற்கு முன்பே பாலிசியை சரண்டர் செய்து விடுபவர்கள் ஏராளம். அப்படி நடக்கும்போது, அதுவரை பாலிசிதாரர் செலுத்திய பணத்தின் நிலை என்ன என்றால்? காப்பீட்டு நிறுவனம் சரணடைதல் செலவுகள், கட்டணங்கள் மற்றும் வரிகளைத் தவிர்த்து மீதமுள்ள பிரீமியம் பணத்தை (ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் சரண்டர்) பயனாளருக்கு செலுத்தும். இது சரண்டர் மதிப்பு என கூறப்படுகிறது. பழைய நடைமுறைகளின்படி, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் சரண்டர் மதிப்பு மிகவும் குறைவாகவே இருந்ததால், பயனாளர்களுக்கு அது நஷ்டமாகவே அமைந்தது.
வந்தது புதிய காப்பீட்டு நடைமுறை:
பயனாளருக்கு ஏற்படும் நிதி இழப்பை பெருமளவில் குறைக்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதன்படி, இணைக்கப்படாத பாலிசிகளின் சரண்டர் மதிப்பை அதிகரித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிகள் புதிய நிதியாண்டு (01 ஏப்ரல் 2024) முதல் அமலுக்கு வர உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பே வரைவு ஆவணத்தை வெளியிட்ட IRDAI, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் பிற துறைகளுடன் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
சரண்டர் மதிப்பு தொடர்பான புதிய விதிகள்:
- பாலிசி எடுத்த நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்குள் பாலிசியை சரண்டர் செய்தால், சரண்டர் மதிப்பு ஒரே மாதிரியாகவோ அல்லது சற்று குறைவாகவோ இருக்கும். அதாவது, அதுவரை பாலிசிதாரர் செலுத்திய பிரீமியத் தொகை திரும்ப வழங்கப்படும் அல்லது வரி போன்ற சில செலவுகள் கழிக்கப்பட்டு மீதத்தொகை பயனாளர்களிடம் திருப்பிச் செலுத்தப்படும்.
- பாலிசி எடுத்த பிறகு, 4 முதல் 7 ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்தால், சரண்டர் மதிப்பு சற்று அதிகரிக்கும். இந்த வழக்கில் பாலிசிதாரர் செலுத்திய மொத்த பிரீமியத்தை விட சற்று அதிகமாகப் பெறலாம், காரனம் இங்கு பிரீமியம் வரம்பை கடந்து பணம் செலுத்தப்படுகிறது.
- 7 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்திய பிறகு பாலிசியை சரண்டர் செய்தால், சரண்டர் மதிப்பு அதிகமாக இருக்கும். அதாவது, ஐஆர்டிஏஐயின் புதிய விதியின்படி, பாலிசியை எவ்வளவு காலம் வைத்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு சரண்டர் மதிப்பு அதிகமாக இருக்கும்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முழு பிரீமியத்தையும் செலுத்திய பிறகு, பாலிசி முதிர்வுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் பாலிசியை சரண்டர் செய்யலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலிசியை சரண்டர் செய்தால், பாலிசிதாரருக்கு ஒரு ரூபாய் கூட திருப்பித் தரப்படாது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனம் உத்தரவாதமான சரண்டர் மதிப்பை மட்டுமே செலுத்துகிறது. இதுவும் பெரும் கொண்டிருக்கும்.