ஐபிஎல் 2024ல் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றிருந்தாலும் நிகர ரன் ரேட் காரணமாக இரண்டாவது இடத்தில் உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து, கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 6வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 7வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8வது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் 9வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 3 போட்டிகளில் விளையாடி 3லில் தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இன்று, ஜெய்ப்பூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) எதிர்கொள்கிறது.
தரவரிசை | அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | என்.ஆர்.ஆர் | புள்ளிகள் |
1 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 3 | 3 | 0 | +2.518 | 6 |
2 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 3 | 3 | 0 | +1.249 | 6 |
3 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 4 | 2 | 2 | +0.517 | 4 |
4 | லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் | 3 | 2 | 1 | +0.483 | 4 |
5 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 4 | 2 | 2 | +0.409 | 4 |
6 | பஞ்சாப் கிங்ஸ் | 4 | 2 | 2 | -0.220 | 4 |
7 | குஜராத் டைட்டன்ஸ் | 4 | 2 | 2 | -0.580 | 2 |
8 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 4 | 1 | 3 | -0.876 | 2 |
9 | டெல்லி கேப்பிடல்ஸ் | 4 | 1 | 3 | -1.347 | 2 |
10 | மும்பை இந்தியன்ஸ் | 3 | 0 | 3 | -1.423 | 0 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 ஆரஞ்சு கேப் யாரிடம் உள்ளது..?
ஐபிஎல் 2024லில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4 போட்டிகளில் விளையாடி 203 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) - 4 போட்டிகள் (203 ரன்கள்)
2. ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 போட்டிகள் (181 ரன்கள்)
3. ஹென்ரிச் கிளாசென் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 4 போட்டிகள் (177 ரன்கள்)
4. சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்) - 4 போட்டிகள் (164 ரன்கள்)
5. அபிஷேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 4 போட்டிகள் (161 ரன்கள்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 பர்பிள் கேப் யாரிடம் உள்ளது..?
ஐபிஎல் 2024லில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்களுக்கான பர்பிள் கேப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
1. மோஹித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்) - 4 போட்டிகள் (7 விக்கெட்டுகள்)
2. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 3 போட்டிகள் (7 விக்கெட்டுகள்)
3. மயங்க் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 2 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)
4. யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 போட்டிகள் (6 விக்கெட்கள்)
5. கலீல் அகமது (டெல்லி கேபிடல்ஸ்) - 4 போட்டிகள் (6 விக்கெட்டுகள்)