விவசாய பெண்மணியாக மாறி பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு  மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் பாமக வேட்பாளர் திலகபாமா.


நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தபின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.  நட்சத்திர தொகுதியான தேனி மாவட்டத்திலும் வேட்பாளர்கள் தங்களது அனல் பறக்க பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Students Mental Health: கல்லூரி மாணவர்களுக்கு 24 மணிநேரமும் இலவச மனநல ஆலோசனை- தொலைபேசி எண் வெளியீடு!




தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார். பிரச்சாரத்தில் புது புது வியூகங்கள் அமைத்து தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகளுடன் இணைந்து பணி செய்தும் வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட ராஜக் கப்பட்டி  அருகே உள்ள தம்பகுளத்து பட்டி பகுதியில் பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


TN Weather Update: 41 டிகிரியை கடக்கும்; சுட்டெரித்து வறுத்தெடுக்கும் வெயில்! - எச்சரிக்கும் வானிலை அப்டேட்




அப்போது அங்கு உள்ள விவசாய  நிலங்களில் பெண் விவசாயிகள் பணி செய்து வந்தனர். அப்போது பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்மணியான எனக்கு விவசாயிகளுடன் துயர் துடைக்க விவசாயிகளின் சின்னமான மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வேண்டும் என வாக்குகள் சேகரித்தார்