தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் மைதானத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரை ஆதரித்து திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஐ.பெரியசாமி உழைப்பின் நம்பிக்கை. தேனி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வெற்றி பெற வைக்கும். நீங்கள் அளிக்கும் வாக்கில் இந்திய பிரதமராக ஜனநாயகவாதி வர முடியும். நீங்கள் அளிக்கும் வாக்கில் தமிழகத்தில் இருந்து பிரதமர் வர முடியும். இன்னொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா என்பது சந்தேகம் ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இத்தனை நாள் வெளிநாடுகளுக்கு டூர் சென்ற மோடி தற்போது தேர்தல் வந்ததால் தமிழகத்திற்கு டூர் அடிக்கிறார். திராவிட மாடலாக இருக்கக்கூடிய தி.நகரில் ரோட் ஷோ எடுபடுமா?




மதுரை எய்ம்ஸ் மாதிரி சென்னை மெட்ரோ பணிகள் நிற்காமல் இருக்க மோடி அவர்கள் 12 ஆயிரம் கோடி செலவில் மாநில நிதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை வளைக்க போறேன் என்று ஹிந்தியில் சபதம் எடுக்கிறார் மோடி. தமிழ் பண்பாட்டுக்கு திமுக எதிரி என்று பிரதமர் பேசியுள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் இதுதான் தமிழர் பண்பாடு ஜாதியும் மதத்தாலும் பிளவுபடுத்துற நீங்கள் திமுகவை குற்றச்சாட்டலாமா? சாதியால் மக்களை பிளவு படுத்தும் நீங்கள் வெட்கப்பட வேண்டும். வேண்டாம் மோடி வேண்டாம் மோடி தெற்கிலிருந்து வரக்கூடிய இந்த குரல் இந்தியா முழுவதும் கேட்கட்டும். கூட்டணி வெற்றி பெற்றால் நாடு வளம் பெறும், குறிப்பாக தமிழ்நாடு வளம்பெறும். காலை சிற்றுண்டி திட்டம் கனடா நாட்டில் நமது திட்டம் சென்றடைந்து அந் நாட்டின் பிரதமர் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். மகளிர் உரிமைத் தொகையால் கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.




தமிழ்நாட்டின் மதிக்கிற ஒன்றிய அரசு அமையனும் ஒன்றிய அரசில் நமது கூட்டணி அமைந்த போது தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அதிமுக ஒன்றிய அரசுடன் கூட்டணி சேர்த்தால் சுயநலத்திற்கு பயன்படுத்தும் திமுக ஒன்றிய அரசில் இடம் பெற்றால் மாநில நலனுக்காக செயல்படும். கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை தேனி தொகுதியில் நாம் இழந்தோம். இதுவரை தமிழ்நாடு அனைத்து தொகுதிகளையும் காட்டிலும் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற வேண்டும். பழனிசாமிக்கு காலை எழுந்தவுடன் பத்திரிகை படியுங்கள் அரசியல் அமாவாசை பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார். அதற்கு வழி இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறார் என்று திமுக பிரதமரை குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம். அம்மா மறைவுக்கு பிறகு பழனிசாமி அனைத்து தேர்தலையும் தோல்வி அடைந்து வருகிறது. அதிமுக அழிக்க வெளியில் இருந்து யாரும் வர வேண்டாம் பழனிசாமியு,ம் தினகரனும் , ஓ.பன்னீர்செல்வம் செய்து கொண்டிருக்கின்றனர்.




விவசாயிகள் இந்த ஆட்சியில் கஷ்டம் இருந்தால் தானே பேசுவார்கள். மூன்றாண்டு டெல்லியில் போராடிய உழவர்களை அந்நிய நாட்டவர் போல் அடக்குமுறை செய்தார்களே அப்ப எங்கே போனார் பழனிசாமி. பழனிசாமி அவர்களே திமுக அரசியல் தான் பேராண்மை கிடைத்த தனி அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். நீங்கள் கஜனாவை தூர்வாரினீர்கள் நாங்கள் டெல்டா மாவட்டங்களில் காவிரியை தூர்வாரி கடைமடை வரை  கொண்டு சென்று உள்ளோம் தண்ணீரை. போட்டோவோட போட்டி போடக்கூடிய கட்சிதான் பாஜக என்று சொல்லியவர் தான் தினகரன். அவரைப் பார்த்து கேட்கணும் நோட்டாவுடன் போட்டியிட வந்திருக்கலாம் என்று கேட்கணும். மோடி வாரண்டியுடன் வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார் .




அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால் அவர்கள் சுத்தமாகி வெளிவருவார்கள். மேட் இன் பிஜேபி வாஷிங் மெஷின். கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் வாஷிங் மெஷின் வெளுத்து விடும். அப்படி வெழுக்கப்பட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து தான் தேனியில் போட்டியிடுகிறார். தினகரன், ஜெயலலிதா இருந்தபொழுது போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் இருந்தவர் தான் தினகரன். ஜெயலலிதாவின் வக்கீலை மிரட்டியவர். தினகரன் அம்மா மறைவுக்கு பிறகு சசிகலாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்டு இப்பொழுது வழக்குகளுக்கு பயந்து மோடி வாஷிங் மெஷின் மூலம் வந்தவர் தான் தினகரன். சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் கீ கொடுக்கும் பொம்மையாக அதிமுகாவை ஆட்டி வைக்கிறது பாஜக என உரையாற்றினார். 40 நமதே நாடும் நமதே இந்தியா கூட்டணிக்கு தேனி பாராளுமன்ற தொகுதிக்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் கூட்டணி கட்சி வேட்பாளர் சச்சிதானந்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.