ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • Lok Sabha 2024: தேர்தல் களத்தில் சினிமா பிரபலங்கள்! பரப்புரையில் எந்தெந்த நட்சத்திரங்கள்?

Lok Sabha 2024: தேர்தல் களத்தில் சினிமா பிரபலங்கள்! பரப்புரையில் எந்தெந்த நட்சத்திரங்கள்?

Ad
செல்வகுமார் Updated at: 04 Apr 2024 08:25 PM (IST)

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல சினிமா பிரபலங்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளனர்.

Lok Sabha 2024: தேர்தல் களத்தில் சினிமா பிரபலங்கள்! பரப்புரையில் எந்தெந்த நட்சத்திரங்கள்?

சினிமா பிரபலங்கள் தேர்தல் பரப்புரை

NEXT PREV



நகைச்சுவை, பாடல் மூலமாக சினிமா பிரபலங்களின் தேர்தல் பரப்புரையானது மக்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். 


மக்களவை தேர்தல்:


நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 2 ஆம் தேதி சிக்கிம் மற்றும் அருணாச்சல் ஆகிய மாநிலங்களிலும் ஜூன் 4 ஆம் தேதி இதர மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தலானது, முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரையை தீவிரமாக்கும் வகையிலும் , மக்களை கவரும் வகையிலும் சினிமா பிரபலங்களை அரசியல் கட்சியினர் களமிறக்கியுள்ளனர். சினிமா பிரபலங்களை தொலைக்காட்சி, திரையரங்குகள் உள்ளிட்டவற்றில் மக்கள் அடிக்கடி பார்க்கின்றனர். இதனால், அவர்களை நெருங்கியவர்களாக கருதுகின்றனர். 


இந்நிலையில், எந்த கட்சிக்கு எந்த சினிமா பிரபலம் ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர் எப்படி சேகரிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.


Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். - காரணம் என்ன?


சினிமா பிரபலங்கள்


நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜக கட்சி சார்பாக வாக்கு சேகரித்து வருகிறார். பரப்புரையின் போது பேசிய இவர், 


”பிரதமர் மோடி நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என தெரிவித்தார். மேலும்  ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்; மற்ற விரல்களுக்கு என்ன ஆச்சு? சிரங்கு வந்துவிட்டதா?” என கிண்டலாக நடிகர் செந்தில் பேசினார். 


நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வெள்ளி திரை மற்றும் சின்ன திரையில் பிரபலமாக வலம் வருகிறார். இவர், இந்தியா கூட்டணி சார்பாக பரப்புரை மேற்கொள்வார் என திமுக தெரிவித்துள்ளது. 


நடிகையும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான நமீதா, பாஜக வடசென்னை வேட்பாளர் கனகராஜை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரப்புரையின் போது 24 மணி நேரமும் வேட்பாளர் உங்களுக்காக உழைப்பார்; தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் என தெரிவித்தார்


நடிகை விந்தியா அ.இ.அ.தி.மு.க. சார்பாக பரபரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இவர், பரப்புரையில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் வைத்து வருகிறார். இப்போது மட்டுமல்ல, முன்பு நடைபெற்ற தேர்தலில்கூட கடுமையாக விமர்சனம் வைத்தார்.


நடிகை கௌதமி, அ.இ.அ.தி.மு.க. கட்சிக்காக, இன்று தென் சென்னை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


இவர், கமல் குறித்து கடுமையாக விமர்சனம் வைத்தது பேசு பொருளாகியுள்ளது. அவர் பரப்புரையில் பேசியதாவது“ கமல்  சொந்த சின்னத்தில் நிற்க போவதாக தொண்டர்களிடம் தெரிவித்திருக்கிறார். உடனே அவர்கள், அப்படியா சார் எத்தனை தொகுதி கேட்டாங்களாம். அதற்கு கமல், தொகுதி எல்லாம் இல்லை டார்ச்லைட் புடிச்சிக்கிட்டே நிக்க சொன்னாங்க"ன்னு சொன்னாராம் என்று கடுமையாக விமர்சனம் விமர்சித்திருக்கிறார். 


நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, அ.இ.அ.தி.மு.க.-.வுக்கு ஆதர்வாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.


தேர்தலில், மக்கள் கூட்டத்தை சேர்க்கவும், எளிதில் அணுகவும், மக்களுக்கு நெருங்கிய முகங்கள் மூலம் திட்டத்தை கொண்டு சேர்க்கவும், சினிமா பிரபலங்கள் பரப்புரை செய்யும் முறையை, இப்போது மட்டுமல்ல முன்பு இருந்தே அரசியல் கட்சியினர் கட்சியினர் கடைபிடித்து வருகின்றனர்.


Also Read:Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!




Published at: 04 Apr 2024 08:25 PM (IST)
Tags: vindhya Cinema Senthil Namitha Lok Sabha 2024
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.