18வது மக்களவைத் தேர்தலுக்கு நாடு முழுவதும் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்ற கூட்டணியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியும் உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்பதை பாஜக வெளியிட்டுள்ளது.
இதில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகின்றது, அதேபோல் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இரண்டு தொகுதியில் களமிறங்குகின்றது.
மேலும், புதிய நீதிக்கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் , தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் அணியான அ.தி.மு.க தொண்டர் உரிமைக் குழு ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றது.
1.திருவள்ளூர்
2. வடசென்னை
3.தென்சென்னை
4. மத்திய சென்னை
5. கிருஷ்ணகிரி
6.திருவண்ணாமலை
7. நாமக்கல்
8. திருப்பூர்
9. நீலகிரி
10. கோவை
11. பொள்ளாச்சி
12. கரூர்
13.சிதம்பரம்
14. நாகை
15. தஞ்சை
16. மதுரை
17. திருநெல்வேலி
18. விருதுநகர்
19. கன்னியாகுமரி
பா.ம.க:
1. காஞ்சிபுரம்
2. அரக்கோணம்,
3. தருமபுரி
4. ஆரணி
5. விழுப்புரம்
6. கள்ளக்குறிச்சி
7. சேலம்
8. திண்டுக்கல்
9. மயிலாடுதுறை
10. கடலூர்
புதிய நீதிக்கட்சி - வேலூர் ( தாமரை சின்னம்)
இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர் ( தாமரை சின்னம்)
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் - சிவகங்கை ( தாமரை சின்னம்)
தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம் - தென்காசி ( தாமரை சின்னம்)
அ.ம.மு.க.
1.திருச்சி
2. தேனி
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு
1. ராமநாதபுரம் ( சுயேட்சை)
தமிழ் மாநில காங்கிரஸ்
1.ஈரோடு
2. ஸ்ரீபெரும்புதூர்
3. தூத்துக்குடி