வேட்பு மனு பரீசிலனை:
தமிழக மக்களவை தேர்தல் வேட்பு மனு நேற்று பிற்பகல் மூன்று மணியுடன் நிறைவு பெற்றது. இதில் தேனி மக்களவை தொகுதியில் பிரதான கட்சிகள் சுயேட்சை என 43 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை நடைபெற்றது. இதில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது. இதில் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தில் இந்தியக் குடியுரிமை, பெரா வழக்கு அபராதம் மற்றும் விவசாய நிலங்களின் விபரங்கள் முழுமையாக இடம் பெறவில்லை என திமுக வேட்பாளரின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக வேட்பு மனு மீதான பரிசீலனை மீண்டும் மதியம் 3 மணிக்கு நடைபெறும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வேட்பு மனு நிறுத்திவைப்பு:
இதில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது. இதில் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தில் இந்தியக் குடியுரிமை, பெரா வழக்கு அபராதம் மற்றும் விவசாய நிலங்களின் விபரங்கள் முழுமையாக இடம் பெறவில்லை என திமுக வேட்பாளரின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு வைத்தனர். இதன் காரணமாக வேட்பு மனு மீதான பரிசீலனை மீண்டும் மதியம் 3 மணிக்கு நடைபெறும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிவித்த நிலையில் மீண்டும் மதியம் 3 பின் வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளரின் பிரதிநிதிகள் வைத்த குற்றச்சாட்டுகள் முறையான ஆவணங்கள் இல்லாத என்று நிராகரிக்கப்பட்டு அதன் பின் சுமார் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
டிடிவி தினகரன் வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பு:
இதையடுத்து டிடிவி தினகரனின் வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், டிடிவி தினகரன் வேட்பு மனு மீது பல்வேறு புகார்களை தங்களுக்கு எதிரானவர்கள் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாகவும், புகாராகவும் தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்கள் கூறிய புகாருக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாததும் டிடிவி தினகரனின் வேட்பு மனுவில் எந்தவித ஒரு ஒழிவு மறைவும் இன்றி அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ததாகவும், அதனால் டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என கூறினார்.