திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் 10-வது வார்டு. பெரணமல்லூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு மற்றும் புதுப்பானையம் ஒன்றியத்தில் 11-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன.


மேலும், அனக்காவூர் ஒன்றியம் கோட்டகரம், ஆரணி ஒன்றியம் அக்ராபாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கலசப்பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி, கீழ் பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளானந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி, துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரிய கிளாம்பாடி,சானானந்தல் மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இருமரம் ஆகிய 11 ஊராட்சி மன்றத்தலைவர் பதவி இடங்கள் காலியாக உள்ளன.


 




 


அதேபோல், அனக்காவூர் ஒன்றியத்தில் 6 வார்டு உறுப்பினர்கள். செங்கம் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், செய்யாறு ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 4 வார்டு உறுப்பினர்கள். மற்றும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், போளூர் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள். புதுப்பாளையம் ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள்,


 


தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், தெள்ளார் ஒன்றியத்தில் 8 வார்டு உறுப்பினர், திருவண்ணாமலை ஒன்றியத்தில் 4 வார்டு உறுப்பினர்கள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், வந்தவாசி ஒன்றியத்தில் 3 உறுப்பினர்கள்,  வெம்பாக்கம் ஒன்றியத்தில் 7 வார்டு உறுப்பிர்கள் மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள் என 52 வார்டு உறுப்பினர்கள் என திருவண்ணாமலை மாவட்டத்தில்  இடங்கள் காலியாக உள்ளன.


 




 


திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியுள்ளது. ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சிமன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. 



மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த 3 நாட்களாக ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கான மனு தாக்கல் நடைப்பெற்று வந்த நிலையில் மனு தாக்கல் செய்ய அதிக அளவில் வராததால் தற்போது வரை மனு தாக்கல் மந்தமாக உள்ளது. அதே போன்று கிராம பஞ்சாயத்து தலைவருக்கான வேட்புமனு தாக்கல் ஆரணி ஒன்றியம் அக்ரப்பாளையத்தில் 1நபர்,போளுர் ஒன்றியம் பொத்தாரை 1 நபர், வெண்பாக்கம் ஒன்றியம் 1 நபரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் 


 


 




 


வார்டு உறுப்பினர் பதவிக்கு 27-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அடுத்த வாரம் வேட்பு மனு தாக்கல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. வேட்பு மனு தாக்கல் வரும் 22-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 23-ம் தேதி நடைபெறும். மனுக்களுடன் வரும் வேட்பு மனு  25-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினமே, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். 66 உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 2ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.


ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை  மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் இடமும், 11 ஊராட்சி மன்றத் தலைவர் இடமும், 52 வார்டு உறுப்பினர் இடமும் காலியாக உள்ளன. அதனை பூர்த்தி செய்ய அக்டோபர் 9ம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை 04175 - 233616 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.