கோலிவுட்டின் டாப் நடிகர்களுள் ஒருவரான விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’ . இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்  அடுத்த மாதம் (அக்டோபர் ) 14 ஆம் தேதி விஜயின் அடுத்த படத்துக்கான பூஜை தொடக்கப்படும் என செய்திகள் வெளியாகி வருகிறது. தளபதி 66 என அழைக்கப்படும்  இந்த படத்தை பிரபல இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். வம்சி முன்னதாக கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான ‘தோழா’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. மேலும் தமிழ் மற்றும் நேரடி தெலுங்கு படமாகவும் தளபதி 66 உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜையை அடுத்தமாதம் ஹைதராபாத்தில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் தளபதி66 படத்தின் அப்டேட் ஒன்றை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.






சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குநர் வம்சியிடம் தளபதி 66 குறித்த அப்டேட் ஏதாவது சொல்லுங்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ விரைவில் அதுகுறித்த அப்டேட் உங்களை வந்து சேரும் அப்போது நீங்கள் படம் குறித்து தெரிந்துகொள்ளலாம். இப்போதே நாங்கள் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உங்கள் எதிர்பார்ப்பை நீர்த்துப்போக செய்ய விரும்பவில்லை “ என குறிப்பிட்டுள்ளார். வம்சியின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேச தொடங்கியுள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் அறிவிப்பு தேதியையாவது கூறுங்கள் என இயக்குநர் வம்சியை டேக் செய்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





தளபதி 66 படத்தின் பூஜையை அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துவிட்டு ,படப்பிடிப்பை அடுத்த ஆண்டு  தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு. தளபதி 66  தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட்  படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இது தவிர , செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.