நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நாளான நேற்று வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூம் சாவி தொலைந்து விட்டதால் வாக்கு எண்ணிக்கை கடலூர் மாநகராட்சி தாமதமாக நடைபெற்றது.
பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் சாவியை தொலைத்தாக தேர்தல் அதிகாரிகள் கூறியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் நேற்று குற்றம்சாட்டிய நிலையில், சாவியை தொலைத்த கமிஷனரை கண்டித்தும், கடலூர் மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியும் கடலூர் லாரன்ஸ் ரோடு நான்குமுனை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுகவிருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மறு தேர்தல் நடத்த வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து மனு அளித்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சம்பத் கூறுகையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவின்போது திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட னர் இந்த நிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போதும் கடலூர் மாநகராட்சியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்து விட்டதாக கூறுகிறார் இதே சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளது, ஏனெனில் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய தினம் ஒரு ஆம்புலன்ஸ் பள்ளியின் வெளியே நின்று கொண்டிருந்ததாகவும் யாரோ வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது இது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது.
26 ஓட்டு 6 ஓட்டு 30 ஓட்டு, என குறைவான ஓட்டு வித்தியாசத்தில் எங்களது வேட்பாளர்கள் தோற்றவுள்ளனர், அதிமுக கடலூர் மாநகராட்சியில் 20 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வருகிறது இதற்கு மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி ஆணையரும் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கூறியது போல இது செயற்கை தேர்தல் என்றும், ஜனநாயக முறைப்படி எதுவும் நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடி நான் என் கேட்போம் எனக்கூறினார்.