தாம்பரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 70 வார்டுகளில் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் 2-வார்டு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் தாம்பரம், கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள 52 வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பூவிழி என்பவர் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டிருக்கிறார், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் வந்து பார்வையிட்டார், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் பொழுது,  தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கூட்டணியே வெல்லும்,




தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை திமுக கூட்டணியே கைப்பற்றும் என்றார், இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது, ஒன்று தமிழக முதல்வரின் சிறந்த ஆட்சித்திறன் மற்றொன்று கூட்டணி ஒற்றுமையாக இருப்பது தான், அதிமுகவினர் திமுகவினர் எதுவும் செய்யவில்லை என பொய் பிரச்சாரம் செய்கின்றனர், ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்கள் தான் ஆகிறது, இதற்குள்ளாகவே  இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என பெயர் பெற்று உள்ளார்,  அதிமுகவின் பொய் பிரச்சாரம் எடுபடாது என்று தெரிவித்தார், மேலும் சட்டமன்ற தேர்தலை எப்படி கூட்டணியோடு ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெற்றதோ அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார், அதேபோல தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, தேர்தலுக்கு பின்பு மேயர் பதவி கேட்பதா என தமிழக முதல்வர் பேசி முடிவு செய்யப்படும் என்றார்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண