சென்னை மாநகராட்சி அடையாறு 174வது வார்ட்டில் உள்ள பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என பணத்தை தருகிறார். மக்கள் பணம் மக்களிடமே போய் சேருவது மகிழ்ச்சி தருகிறது.  எதற்காக இவர்கள் இவ்வளவு பணத்தை செலவழிக்கிறார்கள் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். உங்கள் பணம் உங்களிடம் வருகிறது. அமமுக ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கிடையாது. ஆனாலும் நல்ல வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 


ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மாறி பணத்தை வாரி இறைத்துள்ளனர். மிக மிக தவறு. இவர்களுக்கு மக்கள் தான் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். பணம் ஆறாக ஓடுகிறது. தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. எதிர்கட்சி கொடுப்பது மட்டுமே வெளியே தெரிகிறது. ஆளும்கட்சி அமைதியாக இருப்பதைப் பார்த்தால் எல்லா வேலையும் கனகச்சிதமாக முடித்து விட்டார்கள் என்பது தெரிகிறது. 




வாக்கு எண்ணிக்கையின் போது அவர்கள் ஏதாவது குளறுபடி செய்வார்கள். அதனால் தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  ஆட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பது நன்றாக தெரியும்.  இதை எல்ல்லாம் மீறி தேர்தல் என்பது சடங்கு மாதிரி நடைபெறுகிறது.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லாதது. வழக்குகளில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஸ்டாலினை பயமுறுத்தவும்  எடப்பாடி பழனிச்சாமி அதனை பேசி வருகிறார்.


உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது. 2 ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் நடத்துவார்கள். கட்சியில் உள்ளவர்களை தக்க வைத்து கொள்ளவும் கைது பயத்திலும் மத்திய அரசு தனக்கு பாதுகாப்பாக இருப்பதாக இருப்பதாக காட்டி கொள்ள செய்யும் அரசியல் ஸ்டண்ட் தான். தேர்தல் வந்ததும் கொரோனா ஓடிவிட்டது. தற்போது கொரோனா வழிகாட்டு முறைகளை விளையாட்டாக வேடிக்கையாகவும் தெரிகிறது. இவர் அவர் கூறினார்.