விமானம் பறந்துக்கொண்டிருக்கும்போது சக பயணி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 40 வயது பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். நியூஜெர்சியிலிருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக  கூறப்படுகிறது


கடந்த ஜனவரி 31ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லும் விமானத்தில் மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​பிஸினஸ் கிளாஸில் இருந்தபோது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 40 வயதான பெண் கேபின் குழுவினரிடம் கூறினார்.


இதனைத்தொடர்ந்து, ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள போலீசார் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாக  பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிலையத்திடம் தெரிவித்தார். அதிகாரிகள் வந்தவுடன் விமான பயணிகளை சோதனை செய்ததில், சந்தேகத்தின் பேரில் 40 வயதான ஒருவரை கைது செய்தனர். பின்னர், விசாரணையின் கீழ் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.




நியூ ஜெர்சியில் இருந்து லண்டனுக்கு இரவு முழுவதும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இங்கிலாந்தைச் சேர்ந்தவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட 40 வயதான பெண்ணுக்கு ஆதரவாக சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சம்பவம் பற்றி கேட்டபோது, ​​யுனைடெட் ஏர்லைன்ஸ் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதன் விமானக் குழுவினர் குற்றச்சாட்டுகளை அறிந்ததும் காவல்துறையை அழைத்தனர். தங்கள் குழுவினர் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அறிந்தவுடன் உள்ளூர் அதிகாரிகளுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது என்று கூறினர்.


மற்ற பயணிகள் உறங்கிக் கொண்டிருந்த போது, ​இந்த சம்பவம் நடைபெற்றதாகவும்
ஆண் மற்றும் பெண் இருவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண