தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ககந்தீப் சிங் பேடி சென்னை பச்சயப்பன் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று ஆய்வு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு சென்னையில் மட்டும் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் 27,000 பணியாளர்களுக்கு வரும் பிப்ரவரி10-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி அளிக்கப்படும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் நடைபெற இருக்கும் 5,794 வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எண்ணும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசி டிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க: ‛பாப்பா பாடும் பாட்டு... கேட்டு தலையை ஆட்டு...’ துர்கா பட பாணியில் பாஜக வேட்பாளர்!



மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,607 பணியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 1,370 மாநகராட்சி வார்டுகளுக்கு 11,196 பேர், 3,825 நகராட்சி வார்டுகளுக்கு 17,922 பேர், 7,412 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பணியிடங்களுக்கு 28,660 பேர் போட்டியிடுகின்றனர் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 218 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும், தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே எஞ்சியிருக்கும் நிலையில், அதிகளவில் பணமும், பொருள்களும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: ABP Exclusive | ‛விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளாரா? எனக்கு எதுவும் தெரியாதே...’ திமுகவிற்கு ஆதரவளித்த தூத்துக்குடி மன்ற தலைவர் பேட்டி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண