தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மும்முரமாக இறங்கி உள்ளது.  தேர்தல் பணிக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதது குறிப்பிட தக்கது. இந்நிலையில் மதுரையில் பெண் வேட்பாளர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

Continues below advertisement






 



 

தேர்தல் நெருங்கியதையொட்டி  தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரம் காட்டி வருகின்றன, இந்தநிலையில் மதுரை மாநகராட்சியின் மாமன்ற பதவிக்காக 61வது வார்டின் வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ள பெண் வேட்பாளர் பாத்திமா பீவி வாக்காளர்களை கவருவதற்காக, "மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.., சோ... குக்கருக்கு ஓட்டு போடுங்க..," என்ற வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்களை வார்டு முழுவதும் ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி உள்ளார்.

 




 

இப்படி வேட்பாளர் வாக்கு சேகரிப்பதற்காக ஒட்டிய போஸ்டர்கள் அப்பகுதி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க..,  சோ குக்கருக்கு ஓட்டு போடுங்க.., என பதிவிட்டுள்ள போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது.