இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி விலகினார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பின்னர் விராட் கோலி தன்னுடைய இந்த முடிவை அறிவித்திருந்தார். அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கம்பீர் ஒரு தனியார் தளத்தில் பேட்டியளித்துள்ளார். அதில், “கேப்டனாக இருக்கிராரோ இல்லையோ விராட் கோலியின் அனுகுமுறையில் எந்தவித மாற்றமும் இருக்க கூடாது. அதை தான் அவருக்கு நம்புவார் என்று நான் நம்புகிறேன்.
ஏனென்றால் சிறு வயது முதல் ஒரு வீரர் நாட்டிற்காக விளையாடி பல சிறப்பான வெற்றிகளை பெற்று தர வேண்டும் என்று தான் நினைப்பார். இந்திய அணிக்கு கேப்டனாக வேண்டும் என்றும் யாரும் நினைக்கமாட்டார்கள். கேப்டன் பொறுப்பு கிடைத்தால் அது ஒரு கௌரவம் மட்டும் தான். ஆகவே அதற்கும் ஆட்டத்தின் அணுகுமுறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே விராட் கோலி எப்போதும் ஒரே மாதிரியாகவே விளையாட வேண்டும்.
தென்னாப்பிரிக்கா தொடரை பொறுத்தவரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்தது. அத்துடன் இந்திய அணியில் சிறப்பான ஃபினிசர்கள் இல்லை. இதனால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 42 மாதங்கள் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து டி20 உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலி விலகினார். அதன்பின்னர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ அவரை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: "நான் அவரை திருமணம் செய்யவில்லை"..தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன்..!