தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் கட்சிகள் மற்றும் சின்னங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர பிரச்சாரமும் நூதன முறை வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினரும் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்பதை வேட்பாளர்களுக்கு உணர்த்தும் வகையில் நெல்லையில் ஒரு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளுக்கு முன் மெழுகுவர்த்தியை ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர், 




நெல்லை பெருமாள்புரம்  அன்பு நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது,  இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.  அதில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்க கூடாது என்று முடிவெடுத்துள்ளனர்,  மேலும் இதை தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் தங்கள் வீட்டின் முன்புறத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து உறுதி மொழி எடுத்து கொண்டனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஓட்டுக்கு பணம் வாங்கினால் வெற்றி பெறும் வேட்பாளர்கள் நல்லது செய்ய மாட்டார்கள், எனவே ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், அதே போல மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், மக்களுக்கு சேவை செய்யும் நல்ல வேட்பாளர்களையே நாங்கள் தேர்வு செய்வோம் என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Valentine's Day | இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதி - காதலர் தினத்தன்று திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்



இப்பெண்க்ளுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த ஆண்களுக்கும்  ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என உறுதி மொழியும் எடுத்துக் கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர், சமீபகாலமாக ஓட்டுக்கு பணம் வாங்குவது தொடர்பாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் நெல்லையில் பெண்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், மற்றவர்களும் வாங்காதீர்கள் என பிற வாக்காளர்களுக்கு முன்னுதாரணமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள சம்பவம் அனைவரின் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண