சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்தரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வருகின்ற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில்,  காஞ்சிபுரம்  அண்ணா பிறந்த மண்ணில், அண்ணாவின்  பெயரைச் சொல்லி வாக்கு கேட்கும் இவர்கள், " சாராய விற்றுவரும் காசு குஷ்டநோய் இருப்பவர்கள் கையில் இருந்து வரும் வெண்ணைக்கு சமம்" எனக் கூறிய அண்ணாவின், சொல்லுக்கு ஏற்ப அதே வேலையை தான் இக்கட்சிகள் செய்து வருகின்றன. அரை நூற்றாண்டு ஆட்சியை மாறி மாறி ஆட்சி அமைத்து, அடிப்படை கட்டமைப்பு கூட செய்யாமல் உள்ளதால் தான்  சென்னை மழை காலங்களில்  தத்தளிக்கிறது.

 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என கொடுவருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குளம் என கொண்டு வரவேண்டும். ஆளுநர் மாநில அரசுகளே ஆய்வு செய்வது முறையல்ல, ஆளுநர் மாநில அரசை நீதி ஆய்வு மேற்கொள்வது தவறு. இந்திய அரசை ஜனாதிபதி ஆய்வு மேற்கொண்டால் அனுமதிப்பார்களா,  அரசு அரசு சரியாக திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்கிறது என ஆளுநர் மேற்பார்வை செய்யலாம் , அண்ணா கூறியதை போல ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் ஆளுநர். நாமென்ன வீட்டு பாடமா எழுதித் தருகிறோம், அவர் திருத்தி நமக்கு மார்க் போடுவதற்கு. ஆளுநரின் வேலை ஒற்றர் வேலை என குற்றச்சாட்டை முன்வைத்தார்.



 

மிரட்டப்படுவது அச்சுறுத்தல் படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான், அதிமுக, பாமக விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான், 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப் பட்டுள்ளனர். சில இடங்களில் வேட்பாளர்களை மூன்று நாட்கள், நான்கு நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இளம் வயது வேட்பாளர்களை கடத்தி இருக்கிறார்கள். சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது இது கொடுங்கோன்மை.இப்படி செய்வதற்கு தேர்தலை வேண்டாம் நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம். தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல், இல்லாமல் நடைபெற வேண்டும். 

 

பாரதிய ஜனதாவை விட அதிக வாக்கு வங்கிகளை  நாம் தமிழர் கட்சி வைத்துள்ளது. நாங்கள்தான் எதிர்கட்சி, ஆனால் 2% வாக்கு வங்கியை வைத்திருக்கும் வர ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை நாங்கள்தான் எதிர்க்கட்சித என கூறி வருகிறார். நீட், ஜிஎஸ்டி,  உள்ளிட்டவற்றை முதன்முதலில் கொண்டுவந்தது காங்கிரஸ் தான் அது உலகத்திற்கே தெரியும், காங்கிரஸ் கொண்டுவந்ததை பாரதிய ஜனதா தொடர்கிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இதை செயல்படுத்த முடியவில்லை இப்போது பாரதிய ஜனதா தனி பெரும்பான்மையாக இருப்பதால் அதை செயல்படுத்தி வருகிறார்கள். வார்டு உறுப்பினர்களாக நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் வந்தால் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள், தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே மேயர் உள்ளிட்ட பதவிகளை பெறுவோம்.



 

மானம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமென திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பேசி, வருவது குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவன் தமிழன், ஆனால் தமிழன் தான் அவமான சின்னமாக உலகம் முழுவதும் அலைகிறான். அதற்கு காரணம் திமுக கால்களில் விழ வேண்டும். உதயநிதி என்பவர் சாதாரண சட்டமன்ற உறுப்பினர். ஆனால்  அனுபவம் மிகுந்த கட்சி தலைவர்கள் சட்டசபையில் அவரைப் பார்த்து குனிந்து கும்பிட்டு காட்சிகள் எல்லாம் இருக்கிறது , இதுவா சுயமரியாதைச் சுடர் என கேள்வி எழுப்பினார்.

 



 

தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை அறிவிப்பு மட்டுமே செய்து வருகிறார். அதனை  செய்யப்படுத்தவில்லை. தேர்தல் நேரத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றும் தேர்தலுக்கு, முன்பு 5 சவரன் நகை தள்ளுபடி என்றும் வெறும் வெற்று திட்டங்களாக உள்ளது. இவர்கள் தொடர்ந்து 20 அஆண்டுகள் தான் நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் என சொல்லிக்கொண்டு வருகிறார்கள், நிலையானது என்று ஆட்சியாளர்கள் நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். இங்கு எதுவும் நிலை அல்ல, ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என சுவர் விளம்பரங்களில் எழுதிக் கொண்டிருந்தார்கள் ஆனால் இப்பொழுது எங்கே என கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது ஒரு சதவீத வாக்கு வங்கியில் ஆரம்பித்த  வளர்ச்சி தற்போது 7 சதவீத வாக்கு வங்கியில் வந்து நிற்கிறது. திராவிட கட்சிகளின் சின்னத்தை மறந்து எங்களுடைய விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்பதே வெற்றிதான் என கூறினார்.